மரண படுக்கையில் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியம் - டிடி சொன்ன உருக்கமான விஷயம்

By subhashini · 1/5/2024

தன் அப்பாவுக்கு செய்து கொடுத்த சத்தியம் குறித்து முதன் முதலாக மனம் திறந்து டிடி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் அன்றும் இன்றும் என்றும் ரசிகர்களின் பேவரைட் தொகுப்பாளினியாக திகழ்ந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. அந்த அளவிற்கு இவர் தன்னுடைய திறனாலும் சுட்டிதனத்தாலும் அனைவரையும் கட்டி இழுத்தவர்.

மேலும், டிடி தன்னுடைய ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானவர். இவர் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு சின்னத்திரை கலக்கி இருக்கிறார். அதிலும், இவர் விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

டிடி திரைப்பயணம்:

அதோடு இவர் 22 வருடங்களுக்கு மேலாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் ஜாம்பவனாக திகழ்ந்து வருகிறார். இத்தனை ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தாலும் இளமை ததும்பும் முகம் பாவம் உடையவர் திவ்யதர்ஷினி. இதனிடையே டிடி கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் டிடிக்கும் அவரது கணவர் ஸ்ரீகாந்துக்கும் பிரச்சனைகள் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் சில காலமாக தனியாக தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

டிடி குறித்த தகவல்:

அதன் பிறகு தான் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். இவர்களின் விவாகரத்துக்கு பலரும் பல்வேறு விதமான காரணங்களை கூறி வந்தனர். ஆனால், அதையெல்லாம் தாண்டி சினிமா துறையில் ஒரு வெற்றிகரமான பெண் மணியாக திகழ்ந்து வருகிறார் டிடி. கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் காபி வித் காதல். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது இவர் நிகழ்ச்சி,சினிமா என பிசியாக இருக்கிறார். இடையில் இவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் இவரால் அதிக நேரம் நிற்க முடியாது.

டிடி அளித்த பேட்டி:

இதனால் இவர் பெரும்பாலும் சேரில் தான் அமர்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் டிடி, என்னுடைய தந்தை மரணப்படுகையில் இருக்கும்போது அவருக்கு சத்தியம் ஒன்று செய்து கொடுத்தேன். அப்போது அவர், இனி இந்த குடும்பத்தை நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதற்கு நான், நீங்கள் கவலைப்படாதீங்க ப்பா நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னேன் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார். தற்போது இவர் சொன்ன விஷயம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தந்தை குறித்து சொன்னது:

டிடி தந்தை இறந்து கிட்டத்தட்ட 19 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், 4 வருடங்களுக்கு முன்பு கூட டிடி அவருக்காக ஒரு கடிதம் ஒன்றை எழுதி சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். அதில், நீங்கள் உயிருடன் இருந்த போது உங்களுக்கு ஒரு நல்ல சட்டை கூட வாங்கி கொடுக்கவில்லை. அதை நினைத்து நான் எப்போதுமே வருத்தப்பட்டு கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் உங்களை மிஸ் செய்கிறேன். நான் சின்ன வயதில் பள்ளியில் பீஸ் கட்டுவதில் தொடங்கி காசோலை எழுவது என அனைத்தையுமே எனக்கு தன்னிச்சையாக செயல்பட சொல்லிக் கொடுத்தீர்கள் என்றெல்லாம் எமோஷனாக எழுதி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full