Perfect-ஆனா பொண்ணு வேணும்னா, நான் உனக்கு இல்ல - கடலில் கும்மாளம் போட்ட வீடியோவை வெளியிட்ட டிடி.

By Rajkumar · 8/7/2021

விஜய் தொலைக்காட்சயில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் அன்றும் இன்றும் என்றும் ரசிகர்களின் பேவரைட் தொகுப்பாளினியாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. அந்த அளவிற்கு தன்னுடைய பேச்சு திறனாலும் சுட்டிதனத்தாலும் அனைவரையும் கட்டி இழுத்து உள்ளார். டிடி தன்னுடைய ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானவர். நடிகை டிடி அவர்கள் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்குகி வருகிறார்.

திவ்யதர்ஷினி அவர்கள் தமிழ் திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.இதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளராக தொகுத்து வழங்கி உள்ளார். இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

டிடி சிறந்த தொகுப்பாளினியாக பல முறை பல்வேறு விருதுகள் கிடைத்திருக்கிறது. சமீபத்தில் கூட இவருக்கு “டார்லிங் ஆப் தி டெலிவிஷன்” அவார்ட் கூட வழங்கி இருந்தனர். கடந்த சில நாட்களுக்கு டிடிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. இருப்பினும் சமூக ஆக்டிவாக இருக்கும் டிடி புகைப்படங்களை மட்டும் தவறாமல் பதவிவிட்டு வருகிறார்.

https://twitter.com/chettyrajubhai/status/1413154534919000071

அதே போல travel பிரியரான இவர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறந்துவிடுவார். அதே போல சமீபத்தில் மாலத்தீவு சென்ற போது நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். இப்படி ஒரு நிலையில் பழைய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள டிடி, Perfect-ஆனா பொண்ணு வேணும்னா, நான் உனக்கு இல்ல என்று கேப்ஷனையும் கொடுத்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full