விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் ரசிகர்களின் என்றும் பேவரைட் தொகுப்பாளினியாக இருந்து வருவது டிடி எனப்படும் திவ்யதர்ஷினி தான். சமீபத்தில் இவரது 20 ஆண்டுகால தொகுப்பாளினி பணியை பாராட்டி 20 இயர்ஸ் ஆப் டிடி என்ற விழாவும் கொண்டாடப்பட்டது.

விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக இருந்து வரும் டிடி, விஜய் டிவியில் ஒளிபரப்பான காபீ வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவருக்கு 2017 ஆம் ஆண்டு விவாகரத்தும் நடைபெற்றது. விவாகரத்துக்கு பின்னரும் தனது தொகுப்பாளினி பணியை தொடர்ந்து செய்து வருகிறார் டிடி.

Advertisement

சின்னத்திரையில் வருவதற்கு முன்பாகவே பல திரைப்படங்களில் நடித்து வந்தார் டிடி. மேலும், பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமா நடித்துள்ளார்.எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் டிடி அடிக்கடி தனது புகைபடங்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் சமீபத்தில் டிடி தனது மேககப் இல்லா புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த சில காலமாகவே நடிகைகள் பலரும் மேக்கப் இல்லாத புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் நடிகை காஜல் அகர்வால் தனது மேக் இல்லாத புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

Advertisement

இதற்கான காரணத்தை சொன்ன காஜல் அகர்வால், நமக்கு வேறு ஒரு உருவத்தை நாம் செதுக்கிக் கொள்வதோ அல்லது நம்மை வரையறுத்துக்கொள்வதற்கு மாறாக, எப்போது நாம் யார் என்பதை ஒப்புக்கொள்ளத் தொடங்குகிறோமோ அதுதான், நாம் சந்தோசமாக இருப்பதற்கான ஒரே வழி. ஒப்பனைகள், நம்முடைய வெளிப்புறத்தை அழகுப்படுத்தினாலும், அது, நம்முடைய குணத்தை கட்டமைக்காது. அது நாம் யார் என்பதை வரையறுக்காது” என்றுகூறியிருந்தார்.

Advertisement
Advertisement