யாரவது என்னை குள்ளச்சினு கூப்டீங்களா? புகைப்படத்தை பகிர்ந்து டிடி போட்ட பதிவு.

By Rajkumar · 7/5/2020

அன்றும் இன்றும் என்றும் ரசிகர்களின் பேவரைட் தொகுப்பாளினியாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. அந்த அளவிற்கு தன்னுடைய பேச்சு திறனாலும் சுட்டிதனத்தாலும் அனைவரையும் கட்டி இழுத்து உள்ளார். இவர் அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் படிப்பை படித்து முடித்து உள்ளார். டிடி தன்னுடைய ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானவர். நடிகை டிடி அவர்கள் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்குகிறார்.

https://www.instagram.com/p/B_uvpkeDJ2-/

திவ்யதர்ஷினி அவர்கள் தமிழ் திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.இதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளராக தொகுத்து வழங்கி உள்ளார். இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

டிடி சிறந்த தொகுப்பாளினியாக பல முறை பல்வேறு விருதுகள் கிடைத்திருக்கிறது. சமீபத்தில் கூட இவருக்கு “டார்லிங் ஆப் தி டெலிவிஷன்” அவார்ட் தந்து உள்ளார்கள். மேலும், டிடி அவர்கள் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். அதில் தனது புகைபடங்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் தனது throwback புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் ஒரு மேடை மீது நின்று கொண்டிருக்கிறார் டிடி. மேலும், அந்த புகைப்படத்தில்  " என்னை யாரவது குள்ளச்சி என்று அழைத்தார்களா ? குட்டையான பெண்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.. ஜாக்கிரதை" என்று கூறியுள்ளார். 

Tamil Behind Talkies AMP · Quick view
View full