முதலில் உன்னை பிளாக் செய்ய வேண்டும் - நடிகரின் கமன்ட்டால் கடுப்பான டிடி.

By Rajkumar · 28/5/2020

அன்றும் இன்றும் என்றும் ரசிகர்களின் பேவரைட் தொகுப்பாளினியாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. அந்த அளவிற்கு தன்னுடைய பேச்சு திறனாலும் சுட்டிதனத்தாலும் அனைவரையும் கட்டி இழுத்து உள்ளார். இவர் அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் படிப்பை படித்து முடித்து உள்ளார். டிடி தன்னுடைய ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானவர். நடிகை டிடி அவர்கள் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்குகி வருகிறார்.

https://www.instagram.com/p/CAsTkudjM1O/

திவ்யதர்ஷினி அவர்கள் தமிழ் திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.இதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளராக தொகுத்து வழங்கி உள்ளார். இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

டிடி சிறந்த தொகுப்பாளினியாக பல முறை பல்வேறு விருதுகள் கிடைத்திருக்கிறது. சமீபத்தில் கூட இவருக்கு “டார்லிங் ஆப் தி டெலிவிஷன்” அவார்ட் கூட வழங்கி இருந்தனர். கடந்த சில நாட்களுக்கு டிடிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. இருப்பினும் சமூக ஆக்டிவாக இருக்கும் டிடி புகைப்படங்களை மட்டும் தவறாமல் பதவிவிட்டுவருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படத்திற்கு கமன்ட் செய்த நடன இயக்குனர் சதீஸ்,  என்ன DD கீழ விழுந்திட்டுயா..? விரைவில் குணமாக வேண்டுகிறேன். என்று கமென்ட் செய்தார். இதற்கு பதில் அளித்த டிடி, முதல் வேலையா உன்னை ப்ளாக் பண்ண போறேன் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full