விஜய் டீவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. பொதுவாகவே காமெடியன்கள் என்றால் ஆண்கள் மட்டும் தான் என்ற எண்ணத்தை தகர்த்து எறிந்தவர் அறந்தாங்கி நிஷா. இவர் சின்னத்திரையில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பல ஆண் போட்டியாளர்கள் மத்தியில் கலந்து கொண்டு சாதித்து காட்டியவர். தன்னுடைய பேச்சாற்றலால் பல மேடைகளில் கலக்கி உள்ளார்.

மேலும், அறந்தாங்கி நிஷா அவர்கள் தற்போது சினிமா துறையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் விஜய் தொலைக்காட்சியில் முடிவடைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தார். இந்நிலையில் பாட்டி வைத்தியம் சொல்லி அசத்தும் அறந்தாங்கி நிஷா வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. லாக்டோன் நேரத்தில் வீட்டில் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்காக மக்கள் அனைவரும் பல்வேறு வேலைகளை செய்து வருகிறார்கள்.

Advertisement

இந்த சூழ்நிலையில் அறந்தாங்கி நிஷா அவர்கள் பாட்டி சொன்ன வைத்தியங்கள் குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, ஜலதோஷம், காய்ச்சல் பிடித்தது என்றால் நம்ம தாத்தா, பாட்டி யாரும் மருத்துவமனைக்குப் போக மாட்டார்கள். இப்போது இருக்கும் தாத்தா, பாட்டி கூட சளி, காய்ச்சல் என்றால் மருத்துவமனைக்கு செல்வது இல்லை. அதெல்லாம் சரியாக போய்விடும் என்று சொல்வார்கள். அதனால் தான் அவர்கள் எல்லாம் 100, 110, 120 வயது வரை இருக்கிறார்கள்.

ஆனால், நாம் சின்ன விஷயம் என்றால் கூட பயந்து மருத்துவமனைக்கு செல்கிறோம். உண்மையாக நம்மளுடைய மருந்து நம்ம வீட்டிலேயே இருக்கிறது. வேற யாரும் இல்ல அது நம்முடைய தாத்தா பாட்டி தான். பொதுவாகவே ஆவி பிடித்தல் உடம்புக்கு நல்லது. உடம்புக்கு மட்டும் இல்லாமல் முகத்திற்கும் நல்லது. ஆவி பிடித்தல், மிளகு ரசம், தூதுவளை ரசம் இதெல்லாம் வாரம் ஒரு முறை சாப்பிட்டால் உடம்புக்கு ரொம்ப நல்லது. சீக்கிரமாகவே நாம் நோயை விரட்டிவிடலாம். தயவுசெய்து இதையெல்லாம் வாரம் ஒரு செய்யுங்கள் உடம்புக்கு நல்லது என்று கூறினார்.

Advertisement
Advertisement