விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயன் வீட்டில் விசேஷம், சந்தோஷத்தில் என்ன சொல்லி இருக்காரு பாருங்க

By subhashini · 17/12/2024

நாஞ்சில் விஜயன் வீட்டில் விசேஷம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக நாஞ்சில் விஜயன் இருக்கிறார். மேடை கலைஞராக தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை தொடங்கியவர் நாஞ்சில் விஜயன்.

இவர் தன்னுடைய விடாமுயற்சியினால் விஜய் டிவியில் மிகப் பிரபலமான காமெடியானாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். மேலும், இவர் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் லேடிஸ் கெட்டப்பில் தான் நடித்து இருக்கிறார். லேடிஸ் நாஞ்சில் விஜயனுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் விஜய் டிவியின் மூலம் கிடைத்த பிரபலத்தினால் சில படங்களில் கூட நடித்திருந்தார்.

நாஞ்சில் விஜயன் குறித்த தகவல்:

பின் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்ட ‘வள்ளி திருமணம்’ என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நாஞ்சில் விஜயன் நடித்திருந்தார். அதன் பின் இவர் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருக்கிறார். அதோடு இவர் சமூக வலைத்தளங்களிலும் படு ஆக்டிவாக இருக்கிறார். அதில் இவர் பதிவிடும் வீடியோக்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நாஞ்சில் திருமணம்:

மேலும், இவர் யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். அதிலும் இவர் சில குறும்படங்களில் கூட நடித்து இருந்தார். இதனிடையே நாஞ்சில் விஜயன், மரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமண வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். இவரின் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

நாஞ்சில் விஜயன் பதிவு:

அதன் பின் சமீபத்தில் விஜய் டிவியில் முடிந்த ‘குக் வித் கோமாளி சீசன் 5’ நிகழ்ச்சியில் கோமாளியாக நாஞ்சில் விஜயன் கலந்து இருந்தார். ஆனால், நிகழ்ச்சி தொடங்கிய சில வாரத்திலேயே இவர் வெளியேறி விட்டார். அதன்பின் இவர் தன்னுடைய மனைவி மரியாவுடன் சேர்ந்து Mr&Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் நாஞ்சில் விஜயன் சொல்லி இருக்கும் குட் நியூஸ் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by NANJIL VIJAYAN (@nanjilvijayan)

நாஞ்சில் வீட்டில் விசேஷம்:

அதாவது, நாஞ்சில் விஜயன் மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை தான் இவர் வீடியோவாக சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். அதில் அவர், எங்கள் வீட்டிலும் விசேஷம். மரியா கர்ப்பமாக இருக்கிறார். நான் அப்பாவாக போகிறேன். எங்களுக்காகவும் எங்களுக்கு பிறக்க இருக்கும் குழந்தைக்காகவும் கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full