‘கனா காணும் காலங்கள்’ மூலம் இணைந்த அரவிந்த்-சங்கீதா ஜோடி , வெளியான திருமண தேதி அப்டேட்

By subhashini · 28/1/2025

சீரியல் நடிகர்கள் சங்கீதா சாய் மற்றும் அரவிந்த் சேஜு திருமண தேதி குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருப்பவர் சங்கீதா சாய். இவர் தொகுப்பாளினி, நடிகை, செய்தி வாசிப்பாளர் என பன்முகம் கொண்டவர்தான். மதுரையில் பிறந்த இவர், தனது கல்லூரி வாழ்க்கையையும் மதுரையிலேயே முடித்துவிட்டு, சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

இவர் சுமார் ஐந்து வருடங்களுக்கு மேல் ஐடி துறையில் பணியாற்றிய இவர், விஜேவாக ஆசைப்பட்டு ஆடிஷனில் கலந்து கொண்டார். ஆடிஷனில் அனைத்து சுற்றிலும் தேர்வாகி, சுமார் மூன்று மாதங்களுக்கு மேல் விஜேவாக பணியாற்றிக் கொண்டே ஐடி வேலையையும் சங்கீதா தொடர்ந்தாராம். பின், ஐடி வேலையை உதறி விட்டு முழு நேர விஜேவாக பணியாற்றினார். இவர் சன் மியூசிக் பிறந்தநாள் வாழ்த்துக்கள், 24 பிரேம்ஸ், லேடிஸ் சாய்ஸ், பிராங்கா சொல்லட்டா போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்தார்.

விஜே சங்கீதா குறித்த தகவல்:

அதற்குப் பிறகு இவருக்கு சீரியல் வாய்ப்பு கிடைக்கவே சின்னத்திரை பக்கம் வந்துவிட்டார். முதலில் இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பான ‘அழகு’ சீரியலில் தான் பூர்ணா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த கதாபாத்திரம் முதலில் பாசிட்டிவாக காட்டப்பட்டாலும், பின்பு நெகட்டிவ் கதாபாத்திரமாக மாறியது. இந்த சீரியலில் நடிக்கும் போது, தனக்கு சிரமம் ஏற்படும் போதெல்லாம் அந்த சீரியலில் நடித்த நடிகை ரேவதி மற்றும் நடிகை ஸ்ருதி ராஜ் இவருக்கு ஊக்கம் அளித்ததாக சங்கீதா கூறியிருந்தார்.

கனா காணும் காலங்கள்:

அதனைத் தொடர்ந்து, ‘கனா காணும் காலங்கள் 1 ‘ வெப் சீரிஸில் மலர் கதாபாத்திரத்தில் சங்கீதா நடித்திருந்தார். பின், சில தனிப்பட்ட காரணங்களால் அவர் அந்த சீரியஸிலிருந்து விலகி இருந்தார். அதற்கு பிறகு இரண்டாவது சீசனில் இருந்து வேறு ஒருவர் மலர் ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப்பின் சங்கீதா விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘தமிழும் சரஸ்வதியும்’ தொடரிலும் நடித்திருந்தார். அந்த சீரியலில் இவர் கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது.

View this post on Instagram

A post shared by Sangeetha (@sangeethasai_offl)

சங்கீதா காதலர்:

மேலும், 30 வயது கடந்தும் திருமணம் செய்யாமல் இருந்த இவர் தற்போது தன்னுடைய திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது விஜே சங்கீதா, கனா காணும் காலங்கள் சீசன் 1, தொடரில் மலர் டீச்சர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தத் தொடரில் ஸ்டுடென்ட் ஆக நடித்தவர்தான் அரவிந்த் சேஜு. தற்போது இவர்கள் இருவரும் தான் திருமணம் செய்ய இருப்பதாக வீடியோ மூலமாக அறிவித்திருந்தார்கள். அரவிந்த் சேஜு அவர்கள் பிரபல பிளாக் ஷீப் யூடியூப் தொடர்களில் நடித்து பிரபலமானவர்.

அரவிந்த் சேஜு -சங்கீதா திருமணம்:

இதன் மூலமாக தான் இவருக்கு ‘கனா காணும் காலங்கள்’ வெப் சீரிஸில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘அய்யனார் துணை’ என்னும் சீரியலில் சோழன் என்கிற கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் இவர்களின் திருமண தேதி குறித்த தகவல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. அதாவது, வரும் பிப்ரவரி 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சங்கீதா- அரவிந்த் திருமணம் நடைபெற இருக்கிறது. கொரோனாவின் போது அரவிந்தனுடைய பெற்றோர்கள் இறந்து விட்டதால் அவருடைய அண்ணன்கள் தலைமையில்தான் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

behindtalkies AMP · Quick view
View full