Breaking News : பிரபல காமெடி நடிகர் வடிவேலு பாலாஜி காலமானார். ரசிகர்கள் அதிர்ச்சி.

By Rajkumar · 10/9/2020

பிரபல காமெடி நடிகர் வடிவேலு பாலாஜி திடீர் மரணம் அடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் மேடை காமெடி கலைஞரும் காமெடி நடிகருமான பாலாஜி. கலக்கப்போவது யாரு சீசன் 4ல தான் வடிவேல் பாலாஜி அறிமுகமானார். அந்த சீசன் எதிர்பார்த்தப்படி போகலை. வடிவேல் பாலாஜி அந்த சீசனோட வின்னரா இல்லைனாலும் வெளிய தெரிஞ்சார். அதுக்குக் காரணம், அவர் வடிவேலோட எல்லா மாடுலேஷனிலும் பேசுனதுதான்.

வடிவேல் வாய்ஸ்னா எல்லாரும், ‘வேணா… வலிக்கிது, அழுதுருவேன்…’னு ஒரே மாதிரிதான் பேசுவாங்க. ஆனால், வடிவேல் பாலாஜி நாய் சேகர், வண்டு முருகன், சூனா பானா என வடிவேல் சாரோட அத்தனை மாடுலேஷனிலும் கலக்குவார்.அவர் என்ன கான்செப்ட் கொண்டுவந்தாலும் அதோட சேர்த்து நடுவர்கள்கிட்ட பேசி, கேள்வி கேட்டு ஏதாவது பண்ணிட்டே இருப்பார். சீசன் 4ல நடுவர்களா இருந்த பாண்டியராஜன் சாரும் உமா ரியாஸ் மேடமும், ‘வடிவேல் பாலாஜிகிட்ட பார்த்துதான் பேசணும். அடுத்தடுத்து கவுன்ட்டர் கொடுத்துட்டே இருக்கார்’னு சொல்லுவாங்க. அந்த அளவுக்கு தைரியமா நடுவர்களையும் கலாய்ப்பார்.

இப்படி ஒரு நிலையில் வடிவேல் பாலாஜி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக காலமாகி உள்ளார். வடிவேல் பாலாஜி கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடல் நலக் குறைவால் சென்னையில் உள்ள பில்ரோத் மருத்துவமனையில் 15 நாட்களாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

பின்னர் அங்கே சிகிச்சையை தொடர பணம் இல்லாததால் பின்னர் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து உள்ளார். வடிவேலு பாலாஜி விஜய் டிவி நிகழ்ச்சிகளை தாண்டி கோலமாவு கோகிலா படத்திலும் நடித்து இருந்தார். இவரது இழப்பால் ரசிகர்கள் பலரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full