சம்பள பிரச்சனை காரணமாக பிக் பாஸ்ஸில் இருந்து விலகினாரா கமல்? விஜய் டிவி வெளியிட்ட திடீர் அறிக்கையை பாருங்க

By subhashini · 9/8/2024

கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகியது தொடர்பாக விஜய் டிவி வெளியிட்டு இருக்கும் அறிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த ஏழு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சி பல பேரின் கேரியருக்கு துணையாக நின்றும், பலரின் வாழ்க்கையையும் மாற்றியும் இருக்கிறது.

இந்த நிகழ்ச்சி எந்த அளவுக்கு பிரபலமோ அந்த அளவுக்கு பிக் பாஸ் வீடும் பிரபலம். இந்த பிக் பாஸ் வீட்டை பார்ப்பதற்காகவே நிகழ்ச்சியை பார்க்கும் ஒரு கூட்டம் இருக்கிறது. கூடிய விரைவில் பிக் பாஸ் 8 ஒளிபரப்பாக இருப்பதால் ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த ஏழு சீசன்களாக தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன், சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்திருந்தார். இது தொடர்பாக இவர் தனது இன்ஸ்டாகிராமில், கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த பயணத்திலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

கமல் விலகல்:

சினிமா கமிட்மெண்ட்ஸ் காரணமாக இந்த சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியாது. மேலும், நீங்கள் காட்டிய அன்பிற்கும் பாசத்திற்கும், எப்போதும் உங்களுக்கு நன்றி உணர்வோடு இருப்பேன். நீங்கள் காட்டுகின்ற தீவிர ஆதரவு பிக் பாஸ் தமிழை இந்தியாவின் சிறந்த தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்றாக மாற்றி உள்ளது. விஜய் டிவியின் அற்புதமான குழுவிற்கும், இந்த நிகழ்ச்சியை மாபெரும் வெற்றியடைய செய்ததில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். பிக் பாஸ் 8 நிகழ்ச்சியும் கண்டிப்பாக வெற்றி பெரும் என்று தெரிவித்திருந்தார்.

நிகழ்ச்சி குறித்த அப்டேட்:

இப்படி கமல் அறிவித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அடுத்தது யார் தொகுத்து வழங்குவார்கள்? என்ற கேள்வி தான் தற்போது சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக உள்ளது. பிக் பாஸ் 8 சீசனிற்காக செட் அமைப்பது, போட்டியாளர்களை தேர்வு செய்வது போன்ற வேலைகள் ஏற்கனவே தொடங்கி விட்டார்களாம். தற்போது கமல் இடத்தில் யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று விஜய் டிவி முடிவு எடுத்துக் கொண்டிருக்கிறார்களாம். இன்னொரு பக்கம், பிக் பாஸ் நிகழ்ச்சி நடக்குமா? என்று சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. இந்த நிலையில் இதற்கு விஜய் டிவி நிறுவனம் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறது.

View this post on Instagram

A post shared by Kamal Haasan (@ikamalhaasan)

விஜய் டிவி அறிக்கை:

அதில், அன்புள்ள கமல் சார். கடந்த ஏழு வருடங்களாக தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை வழங்கிய உங்கள் அசாதரண பங்களிப்பிற்கு ஸ்டார் விஜயின் ஒட்டுமொத்த குழு சார்பாக எங்களுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். உங்களுடைய அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, கவர்ச்சியான இருப்பு, போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் இருவருடைய உண்மையான ஈடுபாடு ஆகியவை தான் இந்த நிகழ்ச்சி உடைய மகத்தான வெற்றிக்கு காரணம். பார்வையாளர்களுடன் இணைவதற்கு போட்டியாளர்களில் சிறந்தவர்களை வெளிப்படுத்துவதற்கு உங்களுடைய திறமையால் தான் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியாவின் முதன்மையான நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி எங்கள் அனைவர் மனதிலும் அழியாத முத்திரையாக பதிந்துள்ளது.

View this post on Instagram

A post shared by Vijay Television (@vijaytelevision)

கமல் குறித்து சொன்னது:

நிகழ்ச்சிக்கு நீங்கள் கொண்டு வந்த ஆர்வமும், ஆற்றலும் அதிகம். ஏற்கனவே உங்களின் சினிமா கடமைகள் காரணமாக ஓய்வெடுப்பதற்காக உங்கள் முடிவால் நாங்கள் வருத்தம் அடைந்தோம். இருந்தாலும் உங்கள் முயற்சிகளை புரிந்து கொண்டு ஆதரிக்கிறோம். உங்கள் இருப்பு பெரிதும் தவறவிட படும். ஆனால், தமிழ் பிக் பாஸில் தொகுப்பாளராக உங்கள் மரபு எங்களுக்கும், பார்வையாளர்களுக்கும் தொடர்ந்து ஊக்கம் அளிக்கும். உங்களுடைய சினிமா முயற்சிகள் மற்றும் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். இந்த தமிழ் பிக் பாஸில் இந்த சீசன் நீங்கள் நிறுவிய வலுவான அடித்தளத்தின் மீது தொடர்ந்து செழித்து வளரும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று கூறி இருக்கிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full