மேக்கப் இல்லாமல் சொகுசு காரில் இரவில் ஊர் சுற்றிய ஜாக்லின். வைரலாகும் வீடியோ.

By Rajkumar · 17/3/2020

கலக்கப்பபோவது யாரு நிகழ்ச்சி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ஜாக்லின். பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றமம், நல்ல குரல் வளமும் உள்ளவர்களாக தான் இருப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் விஜேவாக திகழ்ந்தார் ஜாக்லின். இவரது முழுப்பெயர் ஜாக்லின் பெர்னாண்டஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் ஜாக்லின் நடித்து உள்ளார்.

https://twitter.com/jacquline_vj/status/1238140809494626304

அதுமட்டும் இல்லாமல் இவர் வெள்ளித்திரையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாராவின் தங்கையாக ஜாக்லின் நடித்திருந்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்பபோவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தார் நடிகை ஜாக்லின்.

இந்த நிகழ்ச்சியில் இவர் செய்த கலாட்டாவின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லாமல் இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது இவர் தேன்மொழி BA ஊராட்சி மன்றத் தலைவர் என்ற தொடரில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த சீரியலில் ஜாக்லின் நடித்து அனைத்து பெண்களுக்கும் முன்னுதாரணமாக இருந்து வருகிறார். அது மட்டுமில்லாமல் படிக்காத கிராமத்துப் பெண் மத்தியில் படித்து நல்ல பதவிக்கு வரணும் என்ற கருத்தையும் இந்த நாடகம் மூலம் ஜாக்லின் உணர்த்தினார்.

https://twitter.com/syedanwar555/status/1238306459080781825

அவரின் நடிப்பும், பேச்சுத்திறனும் ரசிகர்களை ரசிக்க வைத்து உள்ளது. இந்நிலையில் நடிகை ஜாக்குலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் சொகுசு காரின் கூரையை திருந்த ஹாயாக சுற்றி வருகிறார். மேலும் அதில் நடிகை ஜாக்லின் துளி கூட மேக்கப் இல்லாமல் உள்ளார். மேலும், சமீப காலமாகவே சினிமா பிரபலங்கள்(நடிகைகள்) மேக்கப் இல்லாத புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள்.

அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைக்கிறது. இதை நடிகைகள் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். இந்நிலையில் நடிகை ஜாக்லின் மேக்கப் இல்லாத வீடியோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பல விமர்சனங்களை கூறி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.மேலும், இந்த அந்த பையனோட காரா என்றும் பதிவிட்டு வருகின்றனர். ஒரு வேலை பாய் ப்ரெண்டா இருக்குமோ.

behindtalkies AMP · Quick view
View full