கதாநாயகியாக மாறியுள்ள விஜய் டிவி ஜாக்குலின்.! வெளியான டீஸர் இதோ.!

By Rajkumar · 28/7/2019

பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளமை உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் தொகுப்பாளினியாக
கலக்கி வருபவர் ஜாக்லின். இவரது முழுப்பெயர் ஜாக்லின் பெர்னாண்டஸ்.

https://twitter.com/vijaytelevision/status/1155130724241965062

விஜய் டீவியில் வீ.ஜேவாகும் முன்னர் அதே சேனனில் ஒளிபரப்பப்பட்ட கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் நடித்துள்ளார். அதே நேரர்த்தில் நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா என்ற படத்திலும் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார்.

அது போக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்பபோவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் தற்போது பணியாற்றி வருகிறார். ஜாக்லின் விரைவில் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார் என்ற சில தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் ஜாக்லின் கதாநாயகியாக மாறியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள தேன்மொழி என்ற புதிய தொடரில் தான் ஜாக்லின் கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் இந்த தொடரின் டீஸர் ஒன்றும் வெளியாகியுள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full