மகாநதி சீரியலில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகை - அதிர்ச்சியில் vika ரசிகர்கள், யார் தெரியுமா?
மகாநதி சீரியலில் இருந்து முக்கிய பிரபலம் விலகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் மகாநதி சீரியலும் ஒன்று. இந்தத் தொடர் நான்கு சகோதரிகளை மையமாக வைத்து கதை நகர்ந்து கொண்டிருக்கின்றது. சீரியலில் சந்தானம் என்ற நபர் தன் குடும்பத்தை விட்டு துபாயில் வேலை செய்து வருகிறார். அவருடைய குடும்பத்தினர் கொடைக்கானலில் வசித்து வருகின்றார்கள். அவரின் மகள்கள் தான் கங்கா,காவேரி, யமுனா, நர்மதா.
இந்தத் தொடரின் ஆரம்பத்தில் நிவின்- காவிரி காதலித்தார்கள். மற்றொரு பக்கம் பசுபதி காவேரி தந்தைக்கு துரோகம் செய்து இருந்தார். இதை அனைத்தையும் தெரிந்து கொண்ட காவிரி, பசுபதி முகத்திரையை கிழித்தார். பின் காவிரி குடும்பம் பிழைப்புக்காக கொடைக்கானலில் இருந்து சென்னைக்கு சென்று வந்தார்கள். பின் சென்னையில் அவர்கள் தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர் தான் விஜய். பின் காவிரி, விஜய் இடம் ஒரு வருட கான்ட்ராக்ட் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார். ஆரம்பத்தில் விஜய்-காவிரி இருவருக்கும் இடையே சண்டை மட்டும் தான் வந்து கொண்டு இருந்தது.
மகாநதி:
அதற்கு பின் இருவரும் காதலிக்க தொடங்கி கணவன் மனைவியாகவே வாழ ஆரம்பித்து விட்டார்கள். இப்படி இருக்கும் போது விஜய்யின் முன்னாள் காதலி வெண்ணிலா வருகிறார். இதனால் இருவருக்கும் இடையே ப்ரச்சனை வருகிறது. அதோடு இவர்கள் காண்ட்ராக்ட் திருமணம் தெரிந்தவுடன் காவிரியை, அவர் அம்மா தன் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டார். பின் வெண்ணிலாவுக்கு பழைய நினைவுகள் வந்தது. விஜய், வெண்ணிலாவிடம் காவிரியை திருமணம் செய்த விஷயத்தை சொல்லியும் அவர் பிரச்சனை செய்த கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் காவிரி கர்ப்பமாக இருக்கிறார். இந்த விஷயம் தெரிந்ததில் இருந்து விஜய்யை பிடிக்க முடியவில்லை.
பின் அவர் பார்த்து பார்த்து தன் மனைவியை கவனித்துக் கொள்கிறார். இருவருக்கும் இடையே காதலும் அன்பும் அதிகமானது. தற்போது சீரியலில் காவிரியை பழி வாங்குவதற்காக வெண்ணிலாவை பசுபதி கீழே தள்ளி விடுகிறார். இதனால் வெண்ணிலா கோமாவில் இருக்கிறார். இதற்கெல்லாம் காரணம் விஜய் தான் என்று போலீஸ் தீவிரமாக தேடுகிறது. இந்த சமயத்தில் காவிரிக்கு அம்மை போட்டு விடுவதால் விஜய் அவரை கவனித்துக் கொள்கிறார். இதனால் விஜய்க்குமே அம்மை போட்டு விடுகிறது. காவேரி விஜய்யை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இன்னொரு பக்கம் வெண்ணிலாவை மாடியில் இருந்து தள்ளி விட்டது பசுபதி தான் என்ற உண்மை விஜய்க்கு தெரிந்து விடுகிறது. இனி அடுத்து என்ன? என்ற பரபரப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமலும் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10ல் இடம் பிடித்திருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று இந்த சீரியல் இருந்து முக்கிய நடிகர் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இந்த சீரியலில் ஏற்கனவே கங்கா கதாபாத்திரத்தில் நடித்த பிரதீபா,திவ்யா கணேசன் மாற்றப்பட்டார்கள். தற்போது தரணி என்பவர் கங்காவாக நடித்து வருகிறார்.
https://www.youtube.com/watch?v=em5Fe3p_bgU
தற்போது யமுனா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த ஆதிரை சீரியலை விட்டு விலகி இருக்கிறார். சீரியலில் தனக்கான கதாபாத்திரத்துக்கு பெரிதாக முக்கியத்துவம் இல்லை என்பதால் இவர் சீரியலை விட்டு விலகியதாக கூறப்படுகிறது. இவருக்கு பதிலாக ஸ்வேதா என்பவர் தான் இந்த சீரியலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நடிகை ஆதிரை அவர்கள் இதற்கு முன்பு விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளிவந்த பிகில் படத்தில் சிங்கப்பெண்களில் ஒருவராக கலக்கி இருந்தார். அதற்குப்பின் அவருக்கு பெரிதாக பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றவுடன் தான் மகாநதி சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவாக்கியிருக்கிறது. தற்போது இவர் படங்களில் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.