தொலைக்காட்சி நடிகருடன் நடிகை மைனாவிற்கு இரண்டாம் திருமண நிட்ச்சயதார்தம். புகைப்படம் உள்ளே.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. ஆனால், தொலைக்காட்சி வரலாற்றில் இரண்டு மூன்று பாகங்களாக வெளி யானது சரவணன் மீனாட்சி தொடர் தான். இந்த தொடரில் நடித்த பல்வேறு நடிகர் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார். அந்த வகையில் இதே தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரையில் புகழ்பெற்றவர் சீரியல் நடிகை நந்தினி. சீரியல் மட்டுமில்லாது இவர் சினிமாவிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சூரிக்கு மனைவியாக நடித்திருந்தார். மேலும், பல்வேறு படங்களில் நடித்துள்ள மைனா சமீபத்தில் சிவகார்த்தியேகன் நடிப்பில் வெளியாகி இருந்த நம்ம வீட்டு பிள்ளை படத்திலும் நடித்திருந்தார். இந்த நிலையில் நடிகை மைனாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. சீரியல் நடிகரும் நடன இயக்குனராகவும் இருந்து வரும் யோகேஷ்வரன் என்பவரை மைனா காதலித்து வந்ததாக கடந்த சில காலமாக தகவல்கள் வெளியானது.
மேலும், சமீபத்தில் இதனை மைனா கூட உறுதி செய்திருந்தார். நடிகர் யோகேஷ் வேறு யாரும் இல்லை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா, நாயகி போன்ற சீரியல்களில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகை மைனா கடந்த சில நாட்களாக இவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டு வந்தார். ஆனால், இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்பது இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் தான் பலருக்கும் தெரிந்தது.
நடிகை மைனா ஏற்கனவே திருமணமாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை மைனாவிற்கு ஜிம் மாஸ்டர் கார்த்திக் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே குடும்ப வாழக்கை செட் ஆகாத நந்தினிக்கும் அவரது புகுந்த வீட்டில் அடிக்கடி பிரச்சனைகள் இருந்துள்ளது. மேலும், நந்தினி மற்றும் அவரது கணவர் கார்த்திக்கிற்கும் கருத்து வேறுபாடுகள் பல இருந்தது.
இதன் உச்ச கட்டமாக சில ஆண்டுகளுக்கு முன்னர் கணவர் கார்த்திக் தற்கொலை செய்து கொண்டார். மைனாவின் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேசும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்து. மேலும், கார்த்திக் வீட்டார், மைனா தான் கார்த்திக்கின் தற்கொலைக்கு காரணம் என்று கூறி வந்தனர். அதே போல இந்த தற்கொலை தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவந்தனர். தற்கொலைக்கு முன்பாக கார்த்திக் எழுதிய கடிதத்தில் நந்தினியின் அப்பாதான் தற்கொலைக்குக் காரணம் என்று எழுதியிருந்தார். இதனால் நந்தினியும், அவரது தந்தையும் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
எனவே, மைனாவின் கணவர் இறப்புக்கு மைனா தான் காரணம் என்று பலரும் குற்றம் சாட்டி இருந்தனர். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது கணவர் குறித்து பேசிய மைனா, என் கணவரால் நான் பிரபலம் ஆனதாக பேசிக்கொள்கின்றனர். ஆனால் அது உண்மை இல்லை. என்னால் தான் அவர் பிரபலம் ஆனார். இந்த விஷயம் தெரிந்தால் பேச வேண்டும் இல்லை என்றால் வாயை மூடி பேசாமல் இருக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார் மைனா. அதே போல சமீபத்தில் மைனா, மற்றும் கார்த்திக்கின்அம்மா பேசிய உரையாடல் ஒன்றும் வெளியாகி இருந்தது. அதில் மைனா, தனது மகனை ஆண்மையில்லாதவன் என்று கூறி பல முறை சண்டை போட்டார். ஆனால், அவர் இரன்டு முறை கருவை கலைத்திருந்தார் என்றெல்லாம் பேசி இருந்தார் கார்த்தியின் அம்மா.