விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சிக்கு மணிமேகலை வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா

By Ajju · 3/12/2021

தொலைக்காட்சிகள் அனைத்தும் சீரியலை தாண்டி பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதில் ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றுவிடுகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தி வருகிறது. அந்த வகையில்கடந்த இரண்டு சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது.

இந்த இரண்டு சீசனிலும் பல்வேரு கோமாளிகள் கலந்துகொண்டாலும் அதில் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான ஒரு கோமாளியாக இருந்தவர் பிரபல VJ மணிமேகலை. சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக இருந்தவர் மணிமேகலை. பின்னர் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பானியாகவும் அறிமுகம் ஆனார். பின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மணிமேகலை மக்களிடையே பிரபலமான தொகுப்பாளினியாக ஆனார்.

அதுமட்டும் இல்லாமல் இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உள்ளது. மணிமேகலை அவர்கள் உசேன் என்பவரை காதலித்துதிருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்டதால் இவருக்கு தொகுப்பாளினியாக பணிபுரியும் வாய்ப்பு அமையவில்லை. குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கூட அடிக்கடி தன்னை ஆங்காராக போட வேண்டும் என்று புலம்பிக்கொண்டே இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் இவருக்கு விஜய் டிவியில் அடுத்தடுத்து நிகழ்ச்சிகளில் ஆங்கரிங் வாய்ப்பு அளிகப்பட்டு வருகிறது. இந்நிலையில் மணிமேகலை விஜய் டிவியில் தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் ஒரு எபிசோடிற்கு ரூ. 60,000 வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.   

behindtalkies AMP · Quick view
View full