Mr & Mrs சின்னத்திரையில் கலந்து கொண்டுள்ள பிரபல சினிமா நடிகையின் அண்ணன் - அண்ணி. யார் தெரியமா ?

By Rajkumar · 24/4/2021

தொலைக்காட்சிகள் அனைத்தும் சீரியலை தாண்டி பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதில் ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றுவிடுகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கப்பட்ட மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை சீசன் 3 விரைவில் துவங்க இருக்கிறது.

https://twitter.com/vijaytelevision/status/1384446934165770244

சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருந்தது. இதில் குக்கு வித் கோமாளி சீசன் 2 வில் போட்டியாளராக கலந்து கொண்ட தீபா தனது கணவருடன் கலந்து கொண்டுள்ளார். அதே போல குக்கு வித் கோமாளியில் கலக்கிய சரத்தும் தனது மனைவியுடன் கலந்து கொண்டுள்ளார். மேலும், யோகேஷ் - நந்தினி, மணிகண்டன் - சோபியா, வேல்முருகன் - காலா, யுவராஜ் - காயத்ரி என்று மொத்தம் 12 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.இந்த 12 போட்டியாளர்களில் பிரபல நடிகையின் அண்ணன் அண்ணியும் போட்டியாளர்களாக கலந்துகொண்டு இருக்கின்றனர்.

இதையும் பாருங்க : தனது முதல் படத்தின் முதல் நாளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்த ராதிகா. எப்படி இருந்துள்ளார் பாருங்க.

அது வேறு யாரும் இல்லை பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன் தான். தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்கள் பல பேர் இருக்கின்றனர். சன் டிவியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி பின்னர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட ‘ நடன நிகழ்ச்சியில் பங்குபெற்று தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகையாக விளங்கி வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

மணிகண்டன் தான். இவர் சன் மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். வள்ளி, கேளடி கண்மணி, அழகு சீரியல்களில் நடித்துள்ளார். மேலும், இவர் நடிகை சோபியாவை திருமணம் செய்துகொண்டார். ஆனால், இவரை தவிர ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இரண்டு அண்ணன்கள் இருந்துள்ளனர். ஆனால், அவர்கள் இருவருமே இறந்து விட்டார்கள். அதில் ஒரு அண்ணன் காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொண்டார் மற்றொருவர் விபத்தில் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full