தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகன் இருவரின் மரணம் மர்மமான முறையில் உள்ளது. தற்போது இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் (59), மகன் பென்னிக்ஸ் இம்மானுவேல் (31). இவர்கள் சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் ஏபிஜே செல்போன் கடை வைத்திருக்கிறார்கள். ஜெயராஜ் என்பவர் கடந்த 19ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கடை திறந்து வைத்து வைத்துள்ளார். இதனால் காவல் துறை அதிகாரி ஜெயராஜ் இடம் விசாரித்தனர். அப்போது காவல்துறையினருக்கும், ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் தந்தை,மகன் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், தந்தை மகன் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கி உள்ளனர். இரவு முழுவதும் அவர்களை அடி அடி என்று ரத்தம் சொட்ட சொட்ட அடித்து உள்ளனர் போலீஸ். பிறகு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மறுநாள் காலையில் கோவில்பட்டி கிளை சிறையில் காவல்துறையினர் அடைத்தனர். காவல்துறையினர் தாக்கியதில் இருவருக்குமே பலத்த காயம் ஏற்பட்டது. பின் இவர்கள் இருவரையும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து உள்ளனர்.

Advertisement

ஆனால், இருவருமே சிகிக்சை பலனின்றி தந்தை,மகன் மரணமடைந்தார்கள். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தூத்துக்குடி முழுவதும் போராட்டம் வெடித்தது. மேலும், தந்தை, மகன் மரணத்திற்கு பலரும் சோசியல் மீடியாவில் காவல் துறை மீது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன் அவர்களும் இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடுமையான, உருக்கமான பதிவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பது, இதுபோன்று காவல்துறையினால் நிறைய சம்பவங்கள் தமிழ்நாட்டில் நிலவி உள்ளது. ஆனால், இதற்கு எந்த ஒரு முறையான நடவடிக்கைகள் எடுக்க வில்லை. இதனால் தமிழக முதல்வர் உடனடியாக யார் அந்த கொடூரமான காவல் அதிகாரி என்று கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும் என்று நாஞ்சில் விஜயன் தமிழக முதல்வர் எடப்பாடிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Advertisement

தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் காட்டுத் தீயை விட வேகமாக பரவி வருகிறது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி தொகுதியில் திமுக எம்பி கனிமொழி ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தை பதிவிட்டுள்ளார். இது காவல்துறை அதிகாரிகளால் நடந்த வன்முறை என்று தெளிவாக தெரிகிறது. உடனடியாக அவர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து சட்டப்படி அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement
Advertisement