இனி 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி இல்லையா, விஜய் டிவியின் புது பிளான் என்ன தெரியுமா?

By Rajkumar · 5/10/2024

விஜய் டிவியில் தொடங்க இருக்கும் புது குக்கிங் ஷோ நிகழ்ச்சி குறித்த தகவல் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி இதுவரை ஐந்து சீசன்கள் முடிந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

அதற்கு முக்கிய காரணமே, இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். எப்போதுமே பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த உடனே குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கும். அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் 'குக் வித் கோமாளி 5' தொடங்கியது. நான்கு சீசன்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி, சன் டிவியில் ஒளிபரப்பான 'டாப் குக்கு டூப் குக்கு' நிகழ்ச்சிக்கு நடுவராக சென்றார். அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக குக் வித் கோமாளி 5 நிகழிச்சியில் களம் இறங்கினார்.

குக் வித் கோமாளி 5:

மேலும், இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் மற்றும் மணிமேகலை தொகுத்து வழங்கினார்கள். ஆனால், பைனலுக்கு சில வாரங்கள் இருக்க தொகுப்பாளினி மணிமேகலை இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இப்படி மணிமேகலை விலகியது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதோடாக மணிமேகலை போட்ட பதிவில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இனி நான் இல்லை. இந்த சீசனில் மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்துகிறார். அவர் ஆங்கர் பாட்டில் எல்லாம் தலையிடுகிறார்.

பிரியங்கா- மணிமேகலை சர்ச்சை:

அவர் நிகழ்ச்சியில் குக்காக இருக்க வேண்டும். அதை அவர் அடிக்கடி மறந்துவிட்டு வேண்டுமென்றே என்னை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார். அதனால் நான் இந்த நிகழ்ச்சியில் தொடர விரும்பவில்லை என்று எமோஷனலாக பதிவிட்டு இருந்தார். இவர் இப்படி சொன்னது தொக்குபாளினி பிரியங்காவை தான் என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்தது. இந்த சர்ச்சை சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக மாறியது. பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார்கள். மணிமேகலைக்கு ஆதரவாக சிலரும், பிரியங்காவுக்கு ஆதரவாக சிலரும் குரல் கொடுத்திருந்தார்கள்.

குக் வித் கோமாளி 5 பைனல்ஸ்:

இப்படி ஒரு பக்கம் பஞ்சாயத்து சென்று கொண்டிருக்க, குக் வித் கோமாளி 5 சீசனின் பைனல்ஸ்க்கு பிரியங்காதேஷ் பாண்டே, விடிவி கணேஷ், ஷாலினி ஜோயா, சுஜிதா, இர்ஃபான், சூப்பர் சிங்கர் பூஜா உள்ளிட்டோர் தேர்வாகி இருந்தார்கள். இதில் சிறப்பாக சமைத்த பிரியங்கா குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றார். இதற்கு அடுத்தபடியாக சுஜிதா இரண்டாவது இடத்தை பெற்றார். டைட்டிலை வென்ற பிரியங்காவுக்கு ரூபாய் 5 லட்சம் பரிசு தொகையும் வழங்கப்பட்டது. இதுபோல் சர்ச்சையோடு ஆரம்பித்து, சர்ச்சையோடு முடிந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு விஜய் டிவி முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

புது குக்கிங் ஷோ:

அதாவது, வேறு ஒரு சமையல் நிகழ்ச்சியை விஜய் டிவியில் தொடங்க இருப்பதாகவும், அந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் செஃப் தாமு நடுவர்களாக கலந்து கொள்ள இருக்கிறார்களாம். மேலும், ரக்ஷன் மற்றும் ஜாக்குலின் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த நிகழ்ச்சி 'குக்கிங் வித் விஜய் ஸ்டார்' என்ற பெயரில் ஒளிபரப்பாக உள்ளதாம். அதனால், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அடுத்த சீசன் ஒளிபரப்பாகுமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

behindtalkies AMP · Quick view
View full