10,20 நாள்ல நிறுத்திடுவான்னு சொன்னாங்க, ஆனால் என் குழந்தைகளும் செய்யும் - விஜய் டிவி புகழ் சொன்னது

By subhashini · 21/5/2025

விஜயகாந்த்தை போல் விஜய் டிவி பிரபலம் புகழ் செய்து இருக்கும் செயல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கேப்டன் விஜயகாந்தின் இறப்பு செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த், உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் ஆகிய இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். பின் நடிகர் விஜயகாந்த் அவர்கள் சிகிச்சை பலனின்றி காலமானார்.

விஜயகாந்த் மறைவு அவரின் குடும்பத்தை மட்டும் இல்லாமல் தமிழக மக்களையும் அதிகம் பாதித்து இருக்கிறது. மேலும், அவர் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள் . பின் விஜயகாந்தின் உடலுக்கு அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதோடு விஜயகாந்தின் நினைவிடத்தை கோயில் போல் கட்டி இருக்கிறார்கள். தினமும் அந்த இடத்திற்க்கு பொதுமக்கள், பிரபலங்கள் எல்லோரும் அஞ்சலி செலுத்தி விட்டு போகிறார்கள்.

விஜயகாந்த் குறித்த தகவல்:

மேலும், உணவில்லாமல் கஷ்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு தன்னுடைய அலுவலகத்திலேயே சைவம் மற்றும் அசைவ உணவுகளை விஜயகாந்த் வழங்கியிருந்தது அனைவரும் அறிந்ததே போல் தன்னுடைய வீட்டிற்கு யார் வந்தாலும் அவர்களை சாப்பிட வைக்காமல் விஜயகாந்த் அனுப்ப மாட்டார். இதை பல பேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். விஜயகாந்த் மறைவுக்கு பின்னரும் அவருடைய இந்த குணம் பலராலுமே பாராட்டப்பட்டு வருகிறது. இன்னமும் அவருடைய அலுவலகத்தில் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு தான் வருகிறது.

புகழ் எடுத்த முயற்சி:

இப்படி இருக்கும் நிலையில் விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்திய போது சின்னத்திரை நடிகர் புகழ் அவர்கள் அவரைப் போலவே தன்னுடைய அலுவலகத்தில் மக்களுக்கு உணவளிப்பதாக கூறியிருந்தார். இதனுடைய தொடக்கமாக தினமும் ஒரு வேலை 50 பேருக்கு உணவு வழங்க இருப்பதாக புகழ் கூறியிருந்தார். அதன்படி கலைஞர் நகரில் உள்ள அவருடைய அலுவலகத்தில் தினமும் ஏழை மக்களுக்கு புகழ் உணவு வழங்கி வருகிறார். இந்த செயலை கடந்த 500 நாட்களாக நடிகர் புகழ் செய்து வருகிறார். மேலும், 500 வது நாளை முன்னிட்டு விஜயகாந்தின் நினைவிடத்தில் சென்று புகழ் அவரிடம் ஆசீர்வாதி வாங்கி மக்களுக்கு உணவு வழங்கி இருக்கிறார்.

https://www.youtube.com/shorts/YQjnxBpHEJg

அன்னதானம் 500வது நாள்:

பின் செய்தியாளர்களை சந்தித்த புகழ், கேப்டனின் நினைவிடத்தில் உங்களை போலவே ஏழைகளுக்கு உணவளிப்பதாக சொல்லி இருந்தேன். 500 நாட்களுக்கு முன்பு இந்த செயலை ஆரம்பித்தேன். கேப்டனுடைய அருளால் இந்த செயல் நடந்து வருகிறது. 500-வது நாள் என்பதால் அவருடைய ஆசி வாங்கிய பின்னர் உணவளிக்கிறேன். நான் இந்த செயலை ஆரம்பிக்கும்போது பலருமே 10, 20 நாள் தான் இவன் இதை செய்வான். அதற்குப் பிறகு இவனால் உணவு வழங்க முடியாது என்றெல்லாம் கூறியிருந்தார்கள். அவர்களுக்கு ஒன்றை மட்டும் இந்த இடத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

https://www.youtube.com/watch?v=0DRu_txFV1o

புகழ் பேட்டி:

என்னுடைய காலத்திற்கு பிறகும் என்னுடைய குழந்தைகளும் இதை செய்வார்கள். இதே சாலிகிராமத்தில் உள்ள கடைகளில் வாட்டர் வாஷ் வேலை செய்திருக்கிறேன். அப்போதெல்லாம் ஒருவேளை உணவுக்கு கஷ்டப்பட்டு இருக்கிறேன். அந்த வழிதான் இன்று மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வந்ததற்கு காரணம். விஜயகாந்த் மறைந்த போது அவருடைய அன்னதானத்தை பலருமே பாராட்டி இருந்தார்கள். அந்த அதனால் நல்ல நிலையில் இருக்கும் நான் ஏழைகளுக்கு உதவலாம் என்று நினைத்து தான் இந்த செயலை ஆரம்பித்தேன். தற்போது 50 பேருக்கு மதியம் ஒரு வேலை உணவளித்து வருகிறேன். இன்னும் நிறைய வாய்ப்புகள் வந்து நிறைய சம்பாதித்தால் கண்டிப்பாக நிறைய உதவிகள் செய்வேன் என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full