சத்தமில்லாமல் திடீரென திருமணம் செய்த மௌனராகம் சீரியல் நடிகர் - பொண்ணு யார் தெரியுமா?

By subhashini · 9/2/2025

மௌனராகம் சீரியல் நடிகருக்கு சத்தம் இல்லாமல் திருமணம் நடந்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சின்னத்திரை சீரியல் நடிகர், நடிகைகளின் திருமணம் குறித்த செய்தி அதிகமாக வைரலாகி வருகிறது. குறிப்பாக, தங்களுடன் நடித்த நடிகர் நடிகைகளையே காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். சேத்தன்- தேவதர்ஷினி, சஞ்சீவ்- ஆலியா, சித்து- ஸ்ரேயா, மதன்- ரேஷ்மா, தீபக்- அபிநவ்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

சமீபத்தில் கூட சிறகடிக்க ஆசை சீரியல் நாயகன் வெற்றி வசந்த்- வைஷ்ணவி திருமணம் நடைபெற்று இருந்தது. இந்த வரிசையில் தற்போது மௌனராகம் சீரியல் நடிகர் சல்மானுல் இணைந்து இருக்கிறார். விஜய் தொலைக்காட்சிகளில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான தொடர் தான் மௌனராகம். இந்த தொடர் பெங்காலி சீரியலை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் இசை, குடும்பம் கதையை பின்னணியாகக் கொண்ட தொடர்.

மௌனராகம் சீரியல்:

இந்த தொடரில் கிருத்திகா, சபிதா, ராஜீவ் மற்றும் சிப்பி ரஞ்சித் ஆகியோர் நடித்து இருந்தார்கள். இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இரண்டாம் பாகம் ஒளிபரப்பி இருந்தார்கள். அதுவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், இந்த தொடரில் ஹீரோவாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் தான் சல்மானுல்.

சல்மானுல் காதல்:

இவர் தமிழில் நடிப்பதற்கு முன்பு மலையாளம் தொடர்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவர் மலையாளத்தில் மிழி ரெண்டிலும் என்ற சீரியலில் நடித்தார். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் மேகா மகேஷ். இவர்கள் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி வந்தது. அதற்கு ரசிகர்கள், நீங்கள் காதலிக்கிறீர்களா? என்றெல்லாம் கேட்டிருந்தார்கள். ஆனால், இருவருமே எந்த பதிலையும் சொல்லாமல் இருந்தார்கள்.

சல்மானுல் திருமணம்:

இவர்களுடைய கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அது மட்டும் இல்லாமல் இருவருமே சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் இந்த நிலையில் சல்மானுல் - மேகா மகேஷ் திருமணம் நடந்து முடிந்து இருக்கிறது. இது தொடர்பாக சல்மானுல் வெளியிட்ட பதிவில், 'திரு & திருமதி சஞ்சு முதல் திரு & திருமதி சல்மான் வரை. வாழ்க்கையின் அனைத்து மகிழ்ச்சிகளையும், அன்பையும், அக்கறையும், ஏற்றுத்தாழ்வுகளையும், துக்கத்தையும், பயணங்களையும் எல்லாவற்றையும் இணைந்து பகிர்ந்து கொள்ள நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

சல்மானுல் பதிவு:

எப்போதும் எங்களை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. உங்கள் அனைவரையும் நேசிக்கிறோம்.எங்களுடைய மிகப்பெரிய நாளின் ஒரு சிறிய தொகுப்பு இது. வானளவிய மகிழ்ச்சியிலும் ஆனந்தத்திலும் நாங்கள் ஒன்றாய் மூழ்கினோம். எங்கள் திருமணத்தை வண்ணமயமாகவும் மறக்க முடியாததாகவும் மாற்றியதற்கு நன்றி என்று தங்களுடைய திருமண வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்கள். இதை பார்த்து ரசிகர்கள் பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறர்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full