யூடுயூபரை திருமணம் செய்த கண்மணி சீரியல் நடிகை - வெளியான புகைப்படம். மாப்பிளை இவர் தானா

By subhashini · 28/8/2023

யூடியூப் பிரபலத்தை விஜய் டிவி சீரியல் நடிகை திருமணம் செய்திருக்கும் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சமீப காலமாகவே சின்னத்திரை நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்து வருகிறார்கள். மெட்டி ஒலி சேத்தன்- பிரியதர்ஷினி, செந்தில்- ஸ்ரீஜா, ஆலியா மானசா-சஞ்சீவ், ஷபானா- ஆர்யன், ரேஷ்மா- மதன். இந்த வரிசையில் தற்போது மீண்டும் ஒரு சின்னத்திரை நடிகை காதலித்து திருமணம் செய்திருக்கிறார்கள்.

அவர் வேற யாரும் இல்லைங்க நடிகை ஜனனி பிரதீப் தான். சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற தொடர்களில் ஒன்று கண்மணி. இந்த தொடரில் ஜனனி பிரதீப் நடித்திருந்தார். அதற்குப் பிறகு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சிவா மனசுல சக்தி என்ற தொடரிலும் நடித்திருந்தார். இவர் சீரியலில் மட்டுமில்லாமல் ஆல்பம் பாடல்களிலும் நடித்து இருக்கிறார். அப்போது இவருடன் நடித்த இனியன் என்பவரை தான் காதலித்து இருக்கிறார்.

இனியன்- ஜனனி பிரதீப் குறித்த தகவல்:

யூடியூப் மூலம் இனியன் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்து இருக்கிறார். இவர் youtube பிரபலம் மட்டும் கிடையாது. ஜீ தமிழில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் வித்யா நம்பர் ஒன் என்ற சீரியலிலும் இவர் சஞ்சய் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பேமஸான முரட்டு சிங்கிள் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார் இனியன்.

இனியன்- ஜனனி பிரதீப் காதல்:

இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இனியன் மக்கள் மத்தியில் படு பேமஸ் ஆனார். மேலும், இனியன்- ஜனனி இருவரும் சேர்ந்து ஆல்பம் பாடல்களில் நடித்திருக்கிறார்கள். அப்போது தான் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து இருக்கிறது. இவர்கள் இருவருமே ரொம்ப நாட்களாக காதலித்து வந்திருக்கிறார்கள். இது தொடர்பாக சோசியல் மீடியாவில் பல வதந்திகள் கிளம்பி இருந்தது. ஆனால், இருவரும் எதுவும் பேசாமல் இருந்து இருக்கிறார்கள்.

இனியன்- ஜனனி பிரதீப் திருமணம்:

கடந்த மாதம் தான் இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து தங்களுடைய காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள். பின் காதலை அறிவித்த ஒரே மாதத்தில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து இருக்கிறார்கள். இன்று இவர்களுடைய திருமணம் கோலாகலமாக நடைபெற்று இருக்கிறது. இவர்கள் திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

குவியும் வாழ்த்துக்கள்:

அந்த வகையில் எதிர்நீச்சல் நடிகை ஹரிப்பிரியா, சூப்பர் சிங்கர் ஷியாம் விஷால் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள். மேலும், இனியன்- ஜனனி பிரதீப்பின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full