சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள் வாங்கும் சம்பளம்- விஜய் டிவி சீரியலில் இவங்களுக்கு தான் அதிகமாம்

By subhashini · 25/10/2024

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள் வாங்கும் சம்பள விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சின்னத்திரை சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் வித்தியாசமான கதையை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

அந்த வரிசையில் விஜய் டிவியில் எப்போதுமே டிஆர்பியில் நம்பர் 1 சீரியல் ஆக இருப்பது சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடரை எஸ். குமரன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த தொடரில் ஹீரோவாக முத்து என்ற கதாபாத்திரத்தில் வெற்றி வசந்த், ஹீரோயினியாக மீனா என்ற கதாபாத்திரத்தில் கோமதி பிரியாவும் நடிக்கிறார்கள். இவர்களை அடுத்து சீரியலில் சுந்தர்ராஜன், அணிலா, சல்மா, ஸ்ரீ தேவா, பிரீத்தி உட்பட பலர் நடிக்கிறர்கள்.

சிறகடிக்க ஆசை குறித்த தகவல்:

அதுமட்டுமில்லாமல் டிஆர்பி ரேட்டிங்கில் வாரம் வாரம் சன் டிவி சீரியலுக்கே போட்டியாக சிறகடிக்க ஆசை சீரியல் தான் இருக்கிறது. டாப் 5ல் ஏதாவது ஒரு இடத்தை சிறகடிக்க ஆசை சீரியல் பிடித்து விடும். மேலும்,
சீரியலில் ஹீரோ முத்து படிக்காதவர். தன்னுடைய அப்பாவிற்காக எதையும் செய்யக்கூடியவர். சிறு வயதிலிருந்தே அம்மாவின் பாசத்திற்காக ஏங்கக் கூடியவர். ஆனால், விஜயாவுக்கு தன்னுடைய மற்ற இரண்டு பிள்ளைகளை தான் பிடிக்கும். முத்துவை எதிரி போலவே பார்ப்பார்.

சீரியல் கதை:

முத்து கார் டிரைவராக இருக்கிறார். இன்னொரு பக்கம் கதாநாயகி மீனா பூக்கடை நடத்தி வருகிறார்.
எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் மீனாவின் அப்பா இறந்து விடுகிறார். இதனால் அண்ணாமலை, மீனாவை முத்துவுக்கு திருமணம் செய்து வைக்கிறார். மீனா வந்த பிறகு முத்துவின் வாழ்க்கையே மாறுகிறது. அதற்குப்பின் பணக்கார பெண் என நினைத்து ரோகினியை தன்னுடைய மூத்த மகன் மனோஜிக்கு விஜயா திருமணம் செய்து வைக்கிறார். ஆனால், அவர் ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தாயானவர் என்பது தெரியாது. இது தெரியாமல் இருப்பதற்காக பல தில்லாலங்கடி வேலைகளை ரோகினி செய்கிறார்.

சீரியல் ட்ராக்:

மூன்றாவது மகன் ரவி பணக்கார பெண் சுருதியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். தினமும் இந்த மூன்று ஜோடிகளுக்கு இடையே நடக்கும் கலாட்டா கலவரங்கள் தான் சீரியல். தற்போது சீரியலில் மனோஜ், பெரிய டீலர் ஆர்டரை வாங்குவதற்காக தன்னுடைய குடும்பத்தை பணக்கார குடும்பமாக காண்பித்து நடிக்க வைக்கிறார். அவர்களுமே மனோஜுக்காக அதை செய்கிறார்கள். இன்னொரு பக்கம் முத்துவை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்றும் , பிஏ டார்ச்சரில் இருந்து தப்பிக்க ரோகினி திட்டம் போடுகிறார். அடுத்து என்ன? என்ற விறுவிறுப்பிலேயே சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

நடிகர்-நடிகைகள் சம்பளம்:

இப்படி இருக்கும் நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிகர், நடிகைகள் வாங்கலும் சம்பளம் விவரம் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலேயே சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலங்களுக்கு தான் அதிகமாக சம்பளம் கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதோடு ஒரு எபிசோடுக்கு,

வெற்றி வசந்த்-12000
கோமதி பிரியா-12000
சுந்தர்ராஜன்- 8000
நடிகை அணிலா- 8000
நடிகர் ஸ்ரீதேவா- 6000
நடிகை சல்மா - 6000
யோகேஷ்-5000
ப்ரீத்தா ரெட்டி-5000

behindtalkies AMP · Quick view
View full