ரகசியமாக திருமணம் செய்து கொண்ட பிரியங்கா தேஷ்பாண்டே - மாப்பிள்ளை யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்
விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவிற்கு ரகசியமாக திருமணம் நடந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஃபேவரட் தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா. சொல்லப்போனால் டிடிக்கு பிறகு ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருப்பது பிரியங்காவுக்கு தான். இவர் வாயாடி தொகுப்பாளினி என்று பெயர் எடுத்தவர். இவருடைய பேச்சும், சுட்டி தனமும் ரசிகர்களை சீக்கிரமாகவே கவர்ந்தது. அதிலும் இவரின் பிரபலமே சிரிப்பு தான்.
இதனாலேயே இவர் குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதிலும் விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல வருடங்களாக பிரியங்கா தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். பின் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியையும் பிரியங்கா தான் தொகுத்து வழங்கி வருகிறார். பின் இவர் பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார்.
தொகுப்பாளர் பிரியங்கா குறித்த தகவல் :
இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா மிகத் திறமையாக விளையாடி வந்தார். பல பிரச்சனைகளில் பிரியங்கா சிக்கி இருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். மேலும், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரியங்கா டைட்டில் வின்னர் ஆகவில்லை என்றாலும் நிகழ்ச்சியில் ரன்னர் அதாவது இரண்டாம் இடத்தை பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்கா ‘குக் வித் கோமாளி சீசன் 5’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
ப்ரியங்கா திருமணம்:
அந்த நிகழ்ச்சியின் மூலம் பல சர்ச்சைகளில் பிரியங்கா சிக்கி இருந்தார். கடைசியில் சிறப்பாக சமைத்து டைட்டில் பட்டத்தை பிரியங்கா வென்றார். தற்போது பிரியங்கா வழக்கம் போல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதனிடையே பிரியங்கா கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரவீன் குமாரும் விஜய் டிவியின் தயாரிப்பு குழுவில் பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Happy married Life nga ❤️ @Priyanka2804 #priyankadeshpande #priyanka #MarriedLife pic.twitter.com/atP5vMXwVV
— Mani (@manikpc2000) April 16, 2025
ப்ரியங்கா விவாகரத்து:
மேலும், பிரியங்கா திருமணத்திற்க்குபின் தொகுப்பாளர் பணியை தொடர்ந்து வருகிறார். திருமணம் ஆகி கொஞ்ச நாட்கள் தன்னுடைய கணவரைப் பற்றியே பேசி வந்த பிரியங்கா திடீரென்று தன் கணவரை பற்றி பேசுவதை நிறுத்திவிட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட ஒரு வார்த்தை கூட இவர் தன் கணவரை பற்றி பேசவில்லை. இதனால் ரசிகர்கள் எல்லோருமே கேள்வி எழுப்பினார்கள். அதற்குப் பின்னால் பிரியங்காவிற்கும் அவருடைய கணவருக்கும் கருத்து வேறுபட்டு பிரிந்து விட்டார்கள் என்று தெரிந்தது. அதை பிரியங்காவே நிகழ்ச்சியில் ஒப்புக்கொண்டார்.
ப்ரியங்கா இரண்டாம் திருமணம்:
இருந்தாலும் இருவரும் எதற்காக பிரிந்தார்கள் என்று தான் தெரியவில்லை. இப்படி இருக்கும் நிலையில் பிரியங்காவிற்கு ரகசியமாக திருமணம் நடந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, பிரியங்கா வெளிநாட்டில் ரகசியமாக வசி என்பவரை தான் திருமணம் செய்து இருக்கிறார். இந்த திருமணத்தில் பிரியங்காவின் குடும்பம், உறவினர்கள் மட்டும் கலந்து இருந்தார்கள். தற்போது திருமணத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பிரியங்காவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.