விஜய் டிவி போனாலே செட்டில் தான் போல - புதிய காரைவாங்கிய வேலைக்காரன் சீரியல் நடிகர்

By subhashini · 17/12/2021

சமீப காலமாகவே விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கார்களை வாங்கி வந்த வண்ணம் இருக்கின்றனர். குக்கு வித் கோமாளி புகழ், சரத் ஆகியோர் புதியகாரை வாங்கி இருந்தனர். அதே போல கலக்க போவது யாரு ஈரோடு மகேஷ், டிவி ஜாக்லின் என்று பலர் சமீபத்தில் புதிய காரை வாங்கி இருந்தனர். அதே போல சமீபத்தில் ஷிவானி Bmw காரை வாங்கி இருந்தார். அவரை தெடர்ந்து தாடி பாலாஜியும் Bmw காரை வாங்கி இருந்தார். இவர்களை தொடர்ந்து மணிமேகலையும் Bmw காரை வாங்கி இருந்தார்.

வேலைக்காரன் ஹீரோ :

இப்படி விஜய் டிவி பிரபலங்கள் பலர் கார்களை வாங்கி குவித்து வரும் நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'வேலைக்காரன்' தொடரில் நடித்து வரும் சபரி புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். விஜய் டிவியில் மதியம் ஒளிபரப்பாகும் தொடர் தான் வேலைக்காரன். லாக்டோன் காலகட்டத்தில் தான் இந்த சீரியல் வெளிவந்தது. தற்போது இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

யார் இந்த சபரி :

ஆரம்பத்தில் இந்த சீரியலை அனைவரும் ரஜினிகாந்தின் முத்து படத்தின் காப்பி என்று விமர்சனங்களை செய்து வந்தாலும் சீரியலில் கதாநாயகன் சபரியின் நடிப்பை பார்த்து மக்கள் மத்தியில் விருப்ப தொடராக மாறிவிட்டது. வேலைக்காரன் சீரியலில் வேலன் கதாபாத்திரத்தில் சபரிநாதன் நடிக்கிறார். இவர் ஆரம்பத்தில் ஆர் ஜே, வி ஜே, மாடல், மோட்டிவேஷன் ஸ்பீக்கர் என பன்முகங்கள் கொண்டிருந்தார்.சினிமாவில் எப்படியாவது நல்ல நடிகராக வேண்டும் என்ற கனவோடு பல ஷார்ட் பிலிம்களில் நடித்து வந்தார்.

அதிலும் இவர் நடித்த மௌனம் பேசியதே ஷார்ட் பிலிம் நல்ல விமர்சனத்தை கொடுத்தது. அதை பயன்படுத்தி தான் இவர் விளம்பரங்கள், மாடலிங் செய்து வந்தார். யூடியூப் சேனலில் வெப் சீரியலிலும் நடித்து வந்தார். அதற்கு பிறகு தான் இவருக்கு வெள்ளி திரையில் நடிக்க வாய்ப்பு வந்தது. விஐபி-2, துப்பரிவாளன், சைகோ, நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா, நட்பே துணை என பல படங்களில் துணை நடிகராக நடித்தார்.

பறிபோன சீரியல் வாய்ப்புகள் :

இருந்தாலும் இவருக்கு மக்கள் மத்தியில் மிகுந்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. மேலும், விஜய் டிவியின் பிரபல இயக்குனர் பிரவீன் இவருடைய நெருங்கிய நண்பர். நண்பர் மூலம்தான் சபரிக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதன்முதலாக இவர் சரவணன் மீனாட்சி சீரியலில் ரியோ உடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சில காரணங்களால் பறிபோனது. பின் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு சீரியலில் லீட் ரோல் வாய்ப்பும் தடையானது.

வாங்கிய புதிய கார் :

அதுமட்டுமல்லாமல் இவர் தான் ராஜா ராணி 2 சீரியலில் நடிக்க வேண்டியது. ராஜா ராணி சீரியலில் சரவணனாக சபரி நடித்த சில காட்சிகள் எடுத்தபின் கடைசி நேரத்தில் இவருக்கு பதிலாக தான் சித்து தேர்வானார். இப்படி ஏகப்பட்ட ஏமாற்றங்களையும் அவமானங்களையும் சந்தித்த சபரிக்கு வேலைக்காரன் சீரியல் மூலம் ஒரு மன திருப்தி கிடைத்தது. இப்படி ஒரு நிலையில் இவர் புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். இதன் விலை 13 லட்சத்தில் இருந்து 15 லட்சம் வரை இருக்கும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full