சென்னையில் மீண்டும் சொகுசு வீடு வாங்கிய விஜே மணிமேகலை - எத்தனை கோடி தெரியுமா?

By subhashini · 7/3/2025

சென்னையில் சொகுசு வீட்டை மணிமேகலை வாங்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் மியூசிக்கில் ஒரு காலத்தில் பிரபலமான விஜேவாக வலம் வந்தவர் மணிமேகலை. அதன் பின் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் தனது எதார்த்தமான பேச்சால் மக்கள் மத்தியில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வருகிறார். இதனால் இவருக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது.

இதனிடையே மணிமேகலை- உசேன் நீண்ட வருடமாக காதலித்து வந்தார்கள். ஆனால், இவர்களின் காதலுக்கு இரு விட்டாரும் சம்மதிக்காததால் பெற்றோர்களின் எதிர்ப்புகளை மீறி இருவரும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள். மணிமேகலை திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார். உசேன் மதத்திற்கு மணிமேகலை மாறாததால் உசேன் வீட்டிலும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்பட்டது.

மணிமேகலை குறித்து தகவல் :

சில ஆண்டுக்கு முன் தான் உசேன்- மணிமேகலை வீட்டில் சமரசம் ஆகி உள்ளார்கள் என்று தெரிந்தது. மணிமேகலை தற்போது பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மணிமேகலை பிரபலம் அடைந்தார். முதலில் அந்த நிகழ்ச்சியில் கோமாளியாக வந்த இவர் பிறகு, ‘குக் வித் கோமாளி சீசன் 5’ நிகழ்ச்சியை ரக்ஷனோடு சேர்ந்து தொகுத்து வழங்கினார்.

யூடியூப் சேனல்:

அதன் பின் அந்த சீசனில் போட்டியாளராக இருந்த தொகுப்பாளினி பிரியங்காவுடன் ஏற்பட்ட சர்ச்சையால் அந்த நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகினார். அதேபோல், இந்த தம்பதி youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்கள். இந்த சேனலில் இவர்கள் தங்களது வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான தருணங்களையும், புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்கள். இதனால் இவர்களை லட்சக்கணக்கான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். தற்போது மணிமேகலை ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

மணிமேகலை வீடு கார் விவரம்:

இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர், வரலட்சுமி சரத்குமார், சினேகா ஆகியோர் இருக்கிறார்கள். இதற்கிடையில் மணிமேகலை அவர்கள் கொரோனா காலகட்டத்தில் சொந்தமாக கிராமம் ஒன்றில் நிலம் வாங்கி அங்கு பண்ணை வீட்டை கட்டி இருந்தது அனைவரும் அறிந்தது. அதற்கு HM லேண்ட் என பெயர் வைத்து வீடியோவையும் வெளியிட்டு இருந்தார். அதற்குப் பின் இவர் சென்னையில் அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாங்கி இருந்தார். அதே போல் இரண்டு சொகுசு கார்கள், சொகுசு பைக் என்று தன்னுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி மணிமேகலை சென்று கொண்டு இருக்கிறார்.

சொகுசு வீடு வாங்கிய மணிமேகலை:

இப்படி இருக்கும் நிலையில் தற்போது மணிமேகலை, சென்னையில் ஒரு புதிய சொகுசு அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாங்கி இருக்கும் தகவல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. இதனுடைய விலை ஒரு கோடியில் இருந்து ஒன்றரை கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த மகிழ்ச்சியான தகவலை தன்னுடைய கணவர் உசேனுடன் சேர்ந்து மணிமேகலை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். கூடிய விரைவிலயே இந்த வீட்டினுடைய கிரகப்பிரவேசம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

behindtalkies AMP · Quick view
View full