விஜய் நடத்திய கல்வி விருது விழாவின் மதிய உணவு பட்டியல் - என்னென்ன இருக்கு பாருங்களே

By subhashini · 28/6/2024

விஜய் வழங்கிய கல்வி விருது விழா குறித்த அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டின் என்றென்றும் இளைய தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். ஆரம்பத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் தோல்வியை அடைந்தாலும் படிப்படியாக முன்னேறி தற்போது தமிழ் சினிமாவில் நம்பிக்கையின் நாயகனாக விஜய் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது.

View this post on Instagram

A post shared by Behind Talkies (@behindtalkies)

இது ஒரு பக்கம் இருக்க, விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்று சில ஆண்டுகளாகவே கேட்டுக் கொண்டிருந்தார்கள். சமீபத்தில் விஜய் தமிழக வெற்றி கழகம் என்று தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். இதனால் நிர்வாகிகள் மட்டும் இல்லாமல் ரசிகர்களும் உற்சாகம் அடைந்து விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் கூறியிருந்தார்.

விஜய் அரசியல்:

இதற்காக புதிய செயலையும் உருவாக்கி உறுப்பினர் சேர்க்கும் பணியில் நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிட இருப்பதாக விஜய் அறிவித்திருந்தார். அதற்கான வேலைகளிலும் கட்சி நிர்வாகிகள் செயல்பட்டு இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு விஜய் அவர்கள் பத்தாம் மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசளித்து இருந்தார்.

கல்வி விருது விழா:

அந்த விழாவில் மாணவர்களுக்கு அறிவுரையும் வழங்கியிருந்தார். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான கல்வி விருது விழா நடைபெற்று இருக்கிறது. மேலும், இந்த விழாவில் ஊக்கத்தொகையும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சி இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக இன்று நடக்கிறது. இரண்டாம் கட்டமாக ஜூலை 3-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் முதல் கட்டமாக இந்த விருது வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது.

விழா குறித்த தகவல்:

இந்த விழாவில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கட்சியின் நிர்வாகிகள் செய்திருக்கிறார்கள். மேலும், முதற்கட்டமாக சுமார் 800 மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த விழாவிற்கு நேரடியாக விஜய் வந்து மாணவர்களை சந்தித்து பரிசு அளிக்கிறார். அதோடு விழாவில் விஜய், நாங்குநேரி மாணவன் சின்னதுரை அருகில் அமர்ந்திருந்தார்.

மதிய உணவு பட்டியல்:

மேலும், விழாவில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள், பெற்றோர்களுக்கு தரமான உணவுகளையும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். சாதம், வடை, அப்பளம், அவியல், வெற்றிலை பாயாசம், மோர், மலாய் சான்விச், இஞ்சி துவையல், தயிர் பச்சடி, அவரை மணிலா பொரியல், உருளை காரகறி, வத்தக் குழம்பு, கதம்ப சாம்பார், ஆணியன் மணிலா, தக்காளி ரசம் போன்றவை மதிய உணவிற்கு ஏற்பாடு இருக்கிறது. தற்போது இந்த உணவு பட்டியல் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full