'கோயில், தர்கா, தேவாலயங்கள் வைத்து வழிபாடு' த.வெ.க மாநாடு பந்தக்கால் விழாவில் சுவாரசியம்

By subhashini · 4/10/2024

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடிற்கான பந்தக்கால் விழா குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டு இருபவர் விஜய். இவர் கடந்த பிப்ரவரி மாதம் தான் 'தமிழக வெற்றிக் கழகம்' என்று தன் கட்சிக்கு பெயரை அறிவித்திருந்தார். அதோடு, வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிட இருப்பதாக விஜய் அறிவித்திருந்தார். அதற்கான வேலைகளிலும் கட்சி நிர்வாகிகள் செயல்பட்டு இருக்கிறார்கள்.

இப்படி இருக்கும் நிலையில் சில வாரங்களுக்கு முன் பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் விஜய் கட்சி கொடியை ஏற்றியிருந்தார். விஜய் தன்னுடைய கட்சி கொடியை ஏற்றுவதற்கு முன்பு உறுதிமொழி எடுத்து, கட்சிக்கான பாடலையும் பாடி, கொடியை ஏற்றி இருந்தார். அந்த கொடியில் வாகை மலரும், இருபக்கம் யானை படமும் இடம் பெற்றிருக்கிறது. பலரும் விஜய்யின் கட்சி கொடியை பாராட்டி வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். தற்போது மாநாட்டிற்கான வேலையை தான் புஸ்ஸி ஆனந்த் தொடங்கி இருக்கிறார்.

மாநாடு குறித்த தகவல்:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தான் தமிழக வெற்றிக் கழகத்தினுடைய முதல் மாநாடு நடக்க இருக்கிறது. இந்த மாநாட்டிற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு விழுப்புரம் டி.எஸ்.பியிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆன்ந்த் மனு கொடுத்து இருந்தார். பல தடைகளுக்கு பின் மாநாட்டிற்கான அனுமதி கிடைத்து இருக்கிறது. இதில் கட்சி தொண்டர்கள், ரசிகர்கள், மக்கள் என பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மேலும், விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் வருகிற அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு நடைபெற இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=1JcNA0VcEV0

மாநாட்டின் பந்தக்கால் விழா:

தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் த.வெ.க. மாநாட்டின் பந்தக்கால் நடும் விழா இன்று நடைபெற்று இருகிறது. அதிகாலை 4:30 மணியிலேயே இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் இந்து, கிறிஸ்துவம், முஸ்லிம் ஆகிய அனைத்து மதங்களிலிருந்தும் கொண்டுவரப்பட்ட புனித நீரை வைத்து பூஜை நடத்தி இருக்கிறார்கள்.

அர்ச்சகர் பேட்டி:

தமிழக வெற்றிக் கழக்கத்திற்கு மதங்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் விஜய் இதை செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக அர்ச்சகர் அளித்த பேட்டியில், வருகிற 27ஆம் தேதி மாநாடு நடைபெற இருக்கிறது. மாநாடு சிறப்பான முறையில் நடைபெறுவதற்கான எல்லா விதமான ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு விசேஷமாக இருந்தாலும் பந்தக்கால் அமைப்பார்கள். அதற்கான விழா தான் இங்கு நடைபெற்றது. இந்த மாநாடு எவ்விதமான தடைகளும் இல்லாமல், சங்கடங்களும் இல்லாமல் நடக்க தான் இந்த பூஜை நடைபெற்றது.

விழாவின் சிறப்பு:

இதில் கோயில், தர்கா, தேவாலயங்களில் இருந்து புனித நீர் கொண்டு வந்து வழிபாடு செய்திருக்கிறார்கள். எல்லா தெய்வத்தின் பிரசாதத்தையும் கொண்டு வந்து செய்திருப்பது தான் இன்றைய பூஜைக்கான சிறப்பே. இவர்கள் மனதில் எண்ணியவாறு மாநாடு எல்லாமே நல்லபடியாக நடக்க இறைவனின் ஆசிர்வாதம் கிடைக்கும். நாங்களும் பிரார்த்தனை செய்கிறோம் என்று கூறி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full