பிளவு அரசியல், கரப்ஷன் கபடதாரிகள், ஏ டீம் பி டீம் - முதல் மாநாட்டிலேயே தெறிக்க விட்ட தளபதி
அனைவரும் எதிர்பார்த்த விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு இன்று சிறப்பாக நடைபெற்று இருந்தது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து உறுதிமொழி ஏற்பு நடந்தது. பின் கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் உறுதிமொழி வாசித்திருந்தார். மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்து விஜய் எமோஷனலாக கண்கலங்கி இருந்தார். அதற்குப்பின் மேடையில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அதற்கு பிறகு கட்சி பாடல் முடிந்தவுடன் விஜய் மேடைக்கு வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருக்கும் ரேம்பில் விஜய் அவர்கள் தொண்டர்களை பார்த்து கையசைத்தப்படி உற்சாகத்துடன் நடந்து இருந்தார்.
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன ஆதியோன் திருவள்ளுவர் வழியில் நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவராக பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரையும், பெருந்தலைவர் காமராஜரையும், அரசியல் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரையும், வீரத்தமிழ் மங்கை வேலுநாச்சியாரையும், மக்கள் சேவகர் அஞ்சலையம்மாளையும் நம்முடைய அரசியல் வழிகாட்டிகளாக ஏற்று, சாதி, மத, பாலின பாகுபாடு இல்லாத சமத்துவ சமுதாயத்தை உண்டாக்க, மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகளோடு தமிழக வெற்றிக் கழகத்தின் வழியாக உங்களுக்காக உழைக்கனும்னு நான் வரேன் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை கூறப்பட்டது.
மாநாட்டில் விஜய் சொன்னது:
அதற்குப்பின் மேடைக்கு வந்த விஜய், சினிமாவில் நடிக்கலாம், பணம் சம்பாதிக்கலாம் என்றுதான் முதலில் இருந்தேன். சினிமாவில் சம்பாதித்து விட்டு செல்லாமல் என்னை வாழ வைத்த மக்களுக்கு நல்லது செய்ய என்ன செய்வது? என்று யோசித்தேன். அப்போதுதான் அரசியல் நினைவிற்கு வந்தது. அதனால் தான் பெரியாருக்கு பிறகு எங்களுடைய கொள்கையின் தலைவர் பச்சை தமிழர் பெருந்தலைவர் காமராஜர். இந்த மண்ணில் மதச்சார்பின்மைக்கும் நேர்மையான நிர்வாகத்துக்கும் செயல்பாட்டுக்கும் முன் உதாரணமாக இருந்தவர். அவரை எங்கள் வழிகாட்டியாக ஏற்று இருக்கிறோம்.
https://www.youtube.com/watch?v=cacVII71KQo
கட்சி கொள்கை தலைவர்கள்:
இந்திய துணை கண்டத்தின் அரசியல் சாசனத்தை உருவாக்கியவர் அண்ணல் அம்பேத்கர். இவருடைய பெயரை கேட்டாலே சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியவர்கள் எல்லோருமே நடுங்கிப் போய் விடுவார்கள். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தையும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராடிய அவரை எங்கள் வழிகாட்டி என்று சொல்வதில் பெருமை கொள்கிறோம். பெண்களைக் கொள்கை தலைவர்களாக ஏற்று களத்தில் வரும் முதல் அரசியல் கட்சி தமிழக வெற்றிக் கழகம் தான். அதில் ஒரு வீராங்கனை இந்த மண்ணை கட்டிக் காத்த பேரரசி வேலு நாச்சியார்.
பெண் தலைவர்கள்:
இன்னொருவர் இந்த மண் பின்தங்கி விடக்கூடாது என்று முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர் அஞ்சலை அம்மாள். சொத்தை இழந்தாலும் சுயநலம் பார்க்காமல் இந்த மண்ணுக்காக இந்திய சுதந்திரப் போராட்ட களத்தில் இறங்கி போராடிய புரட்சிப் பெண்மணி. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் இங்கு யாருமே மேல கீழே என்ற எந்த பாகுபாடும் பார்க்கப் போவதில்லை. நாம் எல்லோருமே ஒன்றுதான், எல்லோருமே சமம்தான். பெரியார் எங்கள் கொள்கை தலைவர். பெரியார் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்கள் கையில் எடுக்கப் போவதில்லை. எங்களுக்கு அதில் உடன்பாடும் இல்லை. யாருடைய கடவுள் நம்பிக்கையும் நாங்கள் எதிரானவர்கள் கிடையாது.
மற்ற அரசியல் கட்சி குறித்து சொன்னது:
அதேபோல் இங்கே ஒரு கூட்டம் கொஞ்சம் காலமாகவே ஒரே பாட்டை பாடிக்கொண்டு யார் அரசியலுக்கு வந்தாலும் ஒரு குறிப்பிட்ட கலரை அவர்கள் மீது பூசி விட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவர்கள் மட்டும் அண்டர் கிரவுண்டில் டீலிங் போட்டுக்கொண்டு தேர்தல் நேரத்தில் மட்டும் அருகில் வெளியிட்டு சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு எப்போதுமே இந்த பாசிசம் பாசிசம் தான். ஒற்றுமையாக இருக்கின்ற நம் மக்கள் மத்தியில் சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பிரிவினை காட்டி ஃபுல் டைம் சீன் போடுவது வேலையாகிவிட்டது. அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா? அவர்களுக்கு நீங்களும் கொஞ்சம் கூட சளைக்காதவர்கள் இல்லை. மக்கள் விரோத ஆட்சியை திராவிட மடல் ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள் என்று பல விஷயங்களை கூறி இருக்கிறார்.
ஊழல் குறித்து சொன்னது:
மேலும், பிளவுவாத சித்தாந்த அரசியல் மட்டும் எங்களுடைய எதிரியில்லை. இவர்களை எளிதாக கண்டுபிடித்து விடலாம். ஆனால், இந்த ஊழல் இருக்கிறதே அது எங்கு ஒளிந்து இருக்கிறது என்று கண்டுபிடிக்கவே முடியாது. கருத்தியல் பேசிக் கொள்கை நாடகமும் போடும், கலாசார பாதுகாப்பு வேஷமும் போடும். அதற்கு முகமூடி தான் முகமே. இப்படி முகமூடி போட்ட ஊழல் கபடதாரிகள் தான் இப்போது தான் கூடவே இருந்து கொண்டு நம்மை ஆண்டு கொண்டிருக்கின்றார்கள். நம்முடைய ஒரே எதிரி இந்த பிளவுவாத சக்திகள். இன்னொரு எதிரி ஊழல் கபடதாரிகள். இங்கு யார் வரவேண்டும், வரக்கூடாது என்று தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்று கூறி இருக்கிறார்.