குவிந்த Requests, முடங்கிய தளம், 15 மணி நேரத்தில் விஜய் கட்சியில் இத்தனை லட்சம் பேர் இணைந்து உள்ளார்களா?

By Arun · 9/3/2024

விஜய் கட்சியின் செயலியை அறிமுகம் செய்து வைத்த 15 மணி நேரத்தில் பல லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைத்துள்ள செய்தி தமிழக அரசியல் களத்தை அதிரவிட்டு இருக்கிறது. விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் மன்றம் வைத்து இருப்பது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதை அடுத்து தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். இந்த வெற்றி அரசியல் வட்டாரத்தை கதிகலங்க வைத்தது. மேலும், விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும், தங்களின் ஜனநாயக கடமையை செய்வதில் தவறுவதில்லை.

https://twitter.com/tvkvijayhq/status/1766071377235411249

அதோடு விஜய் சினிமாவை தாண்டி பொதுநல சேவைகளையும் செய்து கொண்டு வருகிறார். இதனால் இவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டது. அதோடு விஜய் அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்தி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். இது எல்லாம் அரசியல் வட்டாரத்தில் பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பின் அனைவரும் எதிர்பார்த்தபடி விஜய் அரசியலில் களமிறங்குவதை உறுதி செய்து விட்டார்.

தமிழக வெற்றி கழகம் :

அந்த வகையில் சமீபத்தில் விஜய் தன்னுடைய புதிய கட்சியின் பெயரை அறிவித்து தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்து இருக்கிறார். தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைத்து இருக்கிறார் விஜய். இது ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு உற்சாகத்தை கொடுத்து இருக்கிறது. பின் அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். மேலும், விஜய் அவர்கள் கட்சியின் கொடி, சின்னம் ஆகியவற்றை தேர்வு செய்யும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

https://twitter.com/iammoviebuff007/status/1766091008608227772

இதை அடுத்து கடந்த மாதம் விஜய் உத்தரவின் பேரில் சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலைய செயலக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சிக்கு புதிதாக இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கூறப்பட்டது. அதுக்காக சிறப்பு செயலி உருவாக்கப்படும் என்றும் சில தினங்களில் அந்த செயலி செயல்பாட்டுக்கு வர இருப்பதாகவும் கூறப்பட்டது. அதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடந்து வருகின்றது.

விஜய் அறிமுகம் செய்த செயலி :

இப்படி ஒரு நிலையில் தன்னுடைய கட்சியின் புதிய செயலி ஒன்றை இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு அறிமுகம் செய்திருக்கிறார் நடிகர் விஜய். மேலும், இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கும் அவர் ' இது என்னுடைய தமிழக வெற்றி கழகத்தின் உடைய உறுப்பினர் அட்டை, நான் எடுத்து விட்டேன். பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற அடிப்படை சமத்துவ கொள்கையை பின் தொடர்ந்து, வருகிற சட்டமன்ற தேர்தலில் என்னுடைய பயணத்தில் இணைந்து, மக்கள் பணி செய்ய நாங்கள் ஏற்கனவே வெளியிட்ட எங்கள் கட்சியின் உறுதி மொழியை படியுங்கள். அது உங்கள் எல்லாருக்கும் பிடித்திருந்தால் நீங்கள் விருப்பப்பட்டால் ஜாயின் பண்ணுங்க ப்ளீஸ்' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://twitter.com/MalaimurasuTv/status/1766336035217395826

முடங்கிய தளம் :

இப்படி ஒரு நிலையில் இந்த செயலியை விஜய் அறிமுகம் செய்த சில மணி நேரத்தில் விஜய் ரசிகர்கள் பலர் இந்த செயலியில் பதிவு செய்ய முண்டியடித்து இருக்கின்றனர். இதனால் சிறிது நேரம் இந்த தளமே முடங்கி இருக்கிறது. இருப்பினும் சில மணி நேரத்தில் மீண்டும் சரி ஆகிவிட்டது. விஜய் இந்த செயலியை அறிமுகம் செய்து வைத்த 15மணி நேரத்திற்கு உள்ளாகவே 20 லட்சம் பேர் இணைந்து இருக்கின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full