சமீபத்தில் வெளியான விஜய் டிவியின் புதிய சீரியலின் ப்ரோமோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்துமே TRP மதிப்பீடு என்ற ஒரு விடயத்தை வைத்து தான் தங்களின் தொலைக்காட்சி தரத்தை முடிவு செய்து வருகிறது.அந்த வகையில் பல்வேறு தொலைக்காட்சிகளும் தங்களுடைய TRP தரத்தை நிலைநாட்டிக்கொள்ள பல்வேறு வித்யாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ்,கலர்ஸ் என்று பல்வேறு தொலைக்காட்சியின் அச்சாரமாக விளங்கி வருவது சீரியல்கல் மட்டும் தான். அதில் ஒரு சில தொலைக்காட்சியில் வரும் ஒரு சில நிகழ்ச்சிகள், டிவியின் TRP அளவை எகிற வைக்கிறது.

கொரோனா பிரச்சனை காரணமாக பல்வேறு விஜய் டிவி சீரியல்கள் அதிரடியாக நிறுத்தப்பட்டு இருந்தது. அதே போல தற்போது அடுத்ததுது புதிய சீரியல்கள் துவங்க இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் விஜய் டிவியில் ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ என்ற புதிய சீரியல் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருந்தது. இதில் நாயகனாக ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ சீரியல் நடிகர் வினோத் பாபு நடித்துள்ளார்.

இதையும் பாருங்க :சம்பாதிச்சதா எல்லாம் தானம் பண்ணிட்டாரு, நாங்க இன்னும் வாடக வீட்ல – மாறனின் மனைவி கண்ணீர் பேட்டி.

Advertisement

சமீபத்தில் வெளியான இந்த ப்ரோமோவில் நாயகிக்கு நாயகன் அவரது சம்மதம் இல்லாமல் தாலி கட்டிவிட்டு  ‘இப்போ நா உனக்கு தாலி கட்டிட்டேன், பொட்டும் வச்சிட்டேன், நீ என்ன எனக்கு பொண்டாட்டியா? போவியா’ என்று வசனம் பேசுகிறார். இதை பார்த்த பலரும் இது பெண்களுக்கு எதிரான குற்றம் எப்படி இதை ஒளிபரப்பலாம் என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

திருமணம் ஆகிவிட்டால் தாலியை கழட்ட கூடாது, இப்படித்தான் உடை உடுத்த வேண்டும் போன்ற பிற்போக்கு தனங்கள் சீரியல் மூலமாகத்தான் இன்னும் சமூகத்தை விட்டு அகலாமல் இருப்பதாகவும், இது போன்றவை தான் சமூகத்தை விஷமாக்குவதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் இந்த ப்ரோமோ குறித்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஐ.பி.எஸ், தமிழகத்தில் பெண்களை துன்புறுத்துவதற்கு கொடுக்கப்படும் தண்டனைகள் குறித்த விளக்கத்தை அளித்துள்ளார்.

Advertisement

அதில், பிரிவு 4-ன் படி, கல்வி நிலையங்கள், கோயில் மற்றும் இதர வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையம், சாலை, ரயில்வே நிலையம், சினிமா தியேட்டர், பார்க், பீச், திருவிழா நடக்கும் இடங்கள், பொதுப் போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்ட இடங்களில் பெண்களை துன்புறுத்துவர்கள் மீது, அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், குறைந்தது 10,000 ரூபாய் இழப்பீடும் வசூலிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Advertisement