தனது மனைவி மற்றும் மகளுடன் வெளிநாட்டில் விஜய் - யாரும் பார்த்திடாத அன்ஸீன் வீடியோ இதோ

By subhashini · 30/4/2023

வெளிநாட்டில் தன்னுடைய மனைவி, மகளுடன் விஜய் இருக்கும் அன்சீன் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

இந்த படத்தை தொடர்ந்து சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி இருந்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா போன்ற பலர் நடித்து இருக்கின்றனர். தமன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருந்தார். குடும்ப பின்னணியை மையமாக கொண்ட கதை. இந்த படம் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு வெளியாகி இருந்தது.

விஜய் திரைப்பயணம்:

மேலும், வாரிசு படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், உலக அளவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது. இதனை அடுத்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். இதற்கு முன் லோகேஷ் அவர்கள் விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கி இருந்தார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது.

லியோ படம்:

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. காஷ்மீர் பகுதியில் சில முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து தற்போது சென்னையில் மும்முரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விஜய் படம் குறித்த தகவல்:

மேலும், லியோ படத்திற்கு பின் நடிகர் விஜய் அவர்கள் தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், அதற்கு இன்னும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அது மட்டும் இல்லாமல் வெற்றிமாறன், அட்லீ போன்ற பிற இயக்குனர் படத்திலும் விஜய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய்யின் அன்சீன் வீடியோ:

இந்த நிலையில் விஜய் தன் குடும்பத்துடன் இருக்கும் அன்சீன் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. அதாவது, வெளிநாட்டில் விஜய் தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் அமர்ந்து உணவு உண்ணும் வீடியோ ஒன்று தான் வெளியாகியிருக்கிறது. தற்போது பலரும் அறிந்திடாத விஜயின் இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full