லியோ இசைவெளியீட்டு விழா முடிந்த 2ஆம் நாளே மருத்துவமனைக்கு சென்ற விஜய். இதான் காரணம்.

By subhashini · 3/11/2023

விஜய் மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் உடல்நல குறைவால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த். இவர் புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் பிரமுகருமான மறைந்த அஷ்ரப்பின் உதவியாளராக பணியாற்றியவர். அதோடு இவர் ரியல் எஸ்டேட் பணிகளிலும் ஈடுபட்டு இருந்தார்.

மேலும், இவர் விஜய்யின் தீவிரமான ரசிகர் ஆவார். பின் புதுச்சேரி மாநில விஜய் ரசிகர் மன்ற கவுரவ தலைவராக இருந்தார். அதன்பிறகு தான் புஸ்ஸி ஆனந்த் தலைவரானார். இடையில் இவர் 2006-ல் நடந்த தேர்தலில் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சி சார்பில் புஸ்சி என்ற தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். அதனால் தான் இவர் புஸ்ஸி ஆனந்த் என்று அழைக்கப்பட்டார். இவர் எம்எல்ஏவாக இருந்தாலும் விஜய் மன்ற தலைவராக பணிகளை செய்து வந்தார்.

புஸ்ஸி ஆனந்த் குறித்த தகவல்:

அதற்கு பிறகு விஜய்க்கு நெருக்கமானவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் புஸ்ஸி ஆனந்த் மாறினார். இதையடுத்து புஸ்ஸி ஆனந்திற்கு அகில இந்திய விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் பதவியை விஜய் கொடுத்தார். அதனை தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த் முழுமையாக விஜய் மக்கள் இயக்க பணியை தற்போது வரை கவனித்து வருகிறார். குறிப்பாக, விஜய் ரசிகர்களை ஒருங்கிணைப்பது, இயக்கத்தை நடத்துவது, விஜய் சொல்லும் கருத்துக்களை அவர்களிடம் கொண்டு போய் சேர்ப்பது, விஜய் மக்கள் இயக்கம் சார்பான திட்டங்கள், ஐடியாக்களை செய்வது போன்ற பல பணிகளை செயல்படுத்தி வந்தார்.

https://www.youtube.com/watch?v=M5IKBxkC9js

மருத்துவமனையில் புஸ்ஸி ஆனந்த்:

இந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் உடல்நல குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், புஸ்ஸி ஆனந்த்தை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க விஜய் வந்திருக்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. அதோடு சில தினங்களுக்கு முன்பு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற லியோ படத்தின் வெற்றி விழாவில் கூட புஸ்ஸி ஆனந்த் கலந்து கலந்து கொண்டிருந்தார்.

புஸ்ஸி ஆனந்த் உடல்நிலை:

அதில் அவர் ரசிகர்களை வரவேற்பது, அவர்களை பத்திரமாக நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு அனுப்பி வைப்பது, நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது போன்ற பல வேலைகளை எல்லாம் புஸ்ஸி ஆனந்த் தான் செய்திருந்தார். இதனால் அவருக்கு சோர்வு ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் பலருமே புஸ்ஸி ஆனந்த் உடல் நலத்தை விசாரித்து வருகிறார்கள்.

லியோ படம்:

மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், த்ரிஷா, மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படம் 540 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதனால் இந்த படத்தின் வெற்றி விழா சில தினங்களுக்கு முன் நடந்தது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full