விஜய் மனைவி சங்கீதா வாங்கிய முதல் விருது. என்ன விருதுனு பாருங்க.
தமிழ் சினிமாவில் எத்தனையோ நட்சத்திர தம்பதிகள் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அஜித் ஷாலினி, சூர்யா ஜோதிகா, பிரசன்னா-சினேகா என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், இளையதளபதி விஜய்யின் காதல் திருமணம் சற்று வித்தியாசமானது தான். கோலிவுட்டில் சிறந்த நட்சத்திர தம்பதிகளாக திகழ்ந்து வருகிறார்கள் நடிகர் விஜய்-சங்கீதா. மேலும்,இவர்களுக்கு திருமணம் ஆகி 20 ஆண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றார்கள்.
விஜய் மற்றும் சங்கீதா இருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன்ஆகஸ்ட் 25ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.பின் 2000ம் ஆண்டு சஞ்சய் என்ற மகனும், 2005 ஆம் ஆண்டு திவ்யா என்ற மகளும் பிறந்தார்கள். இந்த நிலையில் பிரபல வலைதள சேனல் நடத்திய விருது விழாவில் சங்கீதாவிற்கு Unheralded Commander அதாவது அறிவிக்கப்படாத தளபதி என்ற விருது வழங்கப்பட்டிருக்கிறது.