தளபதி விஜயின் மனைவி சங்கீதாவின் இலங்கை வீட்டின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

இந்த படத்தை தொடர்ந்து இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு. குடும்பங்கள் கொண்டாடும் லிஸ்டில் இந்த படம் சேர்ந்தது. இந்த படத்தை வம்சி இயக்கி இருந்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, நாசர், போன்ற பலர் நடித்து இருந்தார்கள். தமன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருந்தார். இந்த படம் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு வெளியாகி இருந்தது.

Advertisement

லியோ படம்:

மேலும், வாரிசு படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், உலக அளவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது. இதனை அடுத்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் படம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் பாடல் வெளியாகி இருந்தது.

தளபதி 68 படம்:

இதனை அடுத்து நடிகர் விஜய்யின் தளபதி 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா தான் தளபதி 68 படத்திற்கு இசையமைப்பாளர் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா- விஜய் இணைந்திருக்கிறார்கள். தற்போது தளபதி 68 படத்திற்கான முதல் கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Advertisement

விஜய்-சங்கீதா:

இன்னொரு பக்கம் விஜய் தன்னுடைய மக்கள் இயக்கம் கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனைக் கூட்டமும் நடத்தி இருக்கிறார். அது தொடர்பான புகைப்படம் வீடியோ எல்லாம் இணையத்தில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் விஜயின் மனைவி சங்கீதா வீட்டின் புகைப்படம் தற்போது இணையத்தில் வருகிறது. அதாவது நடிகர் விஜய் அவர்கள் மருத்துவர் சங்கீதாவை 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கோலிவுட்டில் சிறந்த நட்சத்திர தம்பதிகளாக நடிகர் விஜய்-சங்கீதா இருக்கிறார்கள்.

Advertisement

சங்கீதா இலங்கை வீடு:

இவர்களுக்கு திருமணம் ஆகி 22 ஆண்டு காலம் ஆகி விட்டது. அதோடு விஜய்யின் தீவிர ரசிகை தான் சங்கீதா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் பிள்ளைகள் இருக்கிறார்கள். மேலும், சங்கீதா இலங்கையில் பிறந்தவர் . இது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த நிலையில் இலங்கையில் உள்ள சங்கீதாவின் வீட்டின் புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆனால், இந்த வீட்டை தற்போது வேறொரு நபர் வாங்கி இருக்கிறார்.

Advertisement