வாரிசு Vijay கையில் இருக்கும் இந்த குழந்தை யாருடைய வாரிசு தெரியுமா ?

By ·

விஜய்யின் கையில் இருக்கும் குழந்தையின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாக்ஸ் ஆபிஸிலும் இடமும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதோடு பெரிய அளவிலும் இந்த படம் வசூல் செய்யவில்லை. தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜு ஆகிய இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வாரிசு படம்:

இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். இந்த படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவாளராக இருக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடித்தானது தெலுங்கானாவில் தொடங்கியது.

படம் குறித்த தகவல்:

தற்போது படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது. அதே போல அஜித்தின் துணிவு படமும் பொங்கல் பண்டிகையன்று வெளியாக இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சமீபத்தில் கூட சூட்டிங் ஸ்பாட்டில் விஜய் அவர்கள் ரசிகர்களை பார்த்து கைய அசைத்து விட்டு சென்றார்.

படத்தின் முதல் சிங்கள் :

அப்போது எடுத்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. அதேபோல் வாரிசு படத்தின் சில எக்ஸ்குளுசீவ் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. இந்த படத்தில் விஜய் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் முதல் சிங்கள் இந்த வாரம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அந்த பாடலை விஜய் பாடியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் ஆடியோ உரிமையை டி சீரிஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படம்:

தற்போது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, அந்த புகைப்படத்தில் விஜய் கையில் ஒரு குழந்தை இருக்கிறது. அந்த குழந்தை யாருடைய வாரிசு என்று பலரும் கேள்வி எழுப்பியிருந்தார்கள். அந்த குழந்தை வேற யாருமில்லை படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவின் குழந்தை தான். சமீபத்தில் தான் தில் ராஜுவிற்கு குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full