நீண்ட வருடங்களுக்கு பின் தந்தையுடன் விஜய்.! வைரலாகுது விஜய் 63 தயாரிப்பாளர் போட்ட ட்வீட்.!
இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தனது 63 வது வருகிறார். ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், விவேக், கதிர், யோகி பாபு போன்றவர்களும் நடிக்கின்றனர்.
https://twitter.com/agscinemasoffi/status/1102255338286272512
இந்த படத்தை பற்றிய அப்டேட்களை அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் இந்த படத்தின் தயாரிப்பாளரான கல்பாத்தி அகோரத்தின் மகள் அர்ச்சனா கல்பாத்தி. அந்த வகையில் சமீபத்தில் இவர் விஜய் பற்றி போட்ட ட்வீட் செம வைரலாகி வருகிறது.
சமீபத்தில் நடிகர் விஜய் தனது தந்தை சந்திரசேகர் மற்றும் தனது தாய் சோபாவுடன் நெருங்கிய உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அந்த வீடியோவை தான் அர்ச்சனா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விஜயை குடும்பத்துடன் பார்த்து பல ஆண்டுகள் ஆன ரசிங்கர்களுக்கு இந்த வீடியோ மகிழ்ச்சியளித்துள்ளது.