என் மகளுக்கு எல்லாம் தெரியும், ஆனா மகனுக்கு- விவாகரத்து குறித்து மனம் திறந்த விஜய் ஏசுதாஸ்
தன்னுடைய விவாகரத்து குறித்து முதல் முறையாக மனம் திறந்து நடிகர் விஜய் யேசுதாஸ் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான பாடகர் விஜய் யேசுதாஸ். இவர் இந்திய அளவில் பிரபல பின்னணி பாடகரான யேசுதாஸின் மகன். இன்றும் இவரின் பாடல்கள் மக்கள் மத்தியில் கேட்கப்பட்டு தான் இருக்கிறது. இப்போதும் இவருடைய குரலில் ஹரிவராசனம் பாடல் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.
அதேபோல் விஜய் யேசுதாசும் தென்னிந்திய சினிமாவில் பிரபல பாடகராக திகழ்ந்து வருகிறார். இவர் கடந்த 2000 ஆண்டு வித்யாசாகர் இசையில் வந்த பாடலின் மூலம் அறிமுகமானார். அதன் பின் இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று பல்வேறு மொழிகளில் பல பாடல்களை பாடியிருக்கிறார். அதோடு இவர் இதுவரை 300க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார். இதற்காக விஜய் யேசுதாஸ் பல்வேறு விருதுகளையும் குவித்திருக்கிறார்.
விஜய் ஏசுதாஸ் குறித்த தகவல்:
மேலும், இவர் பாடகராக மட்டுமல்லாமல் நடிகரும் ஆவார். இவர் மலையாளத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாரி படத்தில் வில்லனாகவும் நடித்து இருந்தார். அதன் பின்னர் படை வீரன் படத்தில் கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். தற்போது இவர் பாடகராக மட்டுமில்லாமல் படங்களில் நடித்து கொண்டும் வருகிறார். இதனிடையே விஜய் யேசுதாஸ் அவர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு தர்ஷனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
விஜய் ஏசுதாஸ் திருமண வாழ்க்கை:
இவர்கள் ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். பின் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2016 ஆம் ஆண்டு இருவருமே பிரிந்து விட்டனர். இருவருமே விவாகரத்து பெற்று தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் முதல் முறையாக பாடகர் விஜய் யேசுதாஸ் தன்னுடைய விவாகரத்துக் குறித்து பேட்டியில் சொன்னது, எங்களுடைய பிரிவு மூலம் அதிகமாக நான் பாதிக்கப்பட்டதை விட என்னுடைய குடும்பத்தினர் தான் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.
பாடகர் விஜய் யேசுதாஸ் பேட்டி:
நாங்கள் ரெண்டு பேருமே பரஸ்பரமாக புரிதலுக்கு பிறகு தான் விவாகரத்து செய்ய முடிவு எடுத்தோம். இதை இப்போது வரை என்னுடைய பெற்றோர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நல்ல புரிதலுடன் பிரிந்தாலும் என்னுடைய பெற்றோர்கள் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று எனக்கு தெரியும். இது அவர்களுக்கு ரொம்பவே வேதனை அளிக்கிறது. மீடியாவில் இருப்பதால் இதை ரொம்ப நாளைக்கு மறைத்து வைக்கவும் முடியாது.
விவாகரத்து குறித்து சொன்னது:
என்னுடைய மகளுக்கு 15 வயது. அவளுக்கு ஓரளவு எங்களுக்குள் என்ன நடக்கிறது? என்ன பிரச்சனை? என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், என்னுடைய மகனுக்கு ஒன்பது வயது தான் ஆகிறது. அதனால் அவனுக்கு இதைப்பற்றி சொல்லி புரிய வைக்க முடியவில்லை. அதை புரிந்து கொள்ளும் வயதும் அவனுக்கு இல்லை. கண்டிப்பாக அவன் அதை புரிந்து கொள்ள சில காலம் தேவைப்படும். ஒரு நபர் தான் செய்த செயலுக்கு பொறுப்பு ஏற்காவிட்டால் அனைத்துமே பயனில்லாமல் போய்விடும் என்று கூறியிருக்கிறார்.