அப்பாவ நினைச்சி அழுத அசிங்கம், கோழைத்தனம் சொல்லறாங்க - விஜய பிரபாகரன் எமோஷனல்

By subhashini · 9/8/2025

கேப்டன் பிரபாகரன் ரீ-ரிலீஸ் விழாவில் விஜய பிரபாகரன் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே பிரபல முன்னணி நடிகர்களின் படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இதில் சில முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் செய்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது விஜயகாந்தின் நூறாவது திரைப்படமான கேப்டன் பிரபாகரன் படத்தை ஆகஸ்ட் 22 ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

இந்நிலையில் படத்தினுடைய மறு வெளியீட்டை ஒட்டி சென்னை கமலா திரையரங்கில் படத்தினுடைய இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் பட குழுவினர் பலருமே கலந்து கொண்டு விஜயகாந்த் தொடர்பான நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார்கள். இந்த விழாவில் விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன் பேசியது, தமிழ் சினிமாவிலேயே இந்த படம் ஒரு எவர்கீரின். இந்த படத்தை எடுப்பதற்கு கேப்டனும், பப்பாவும், இயக்குனர் செல்வமணி சாரும் முக்கியமானவர்களாக இருந்தார்கள்.

கேப்டன் பிரபாகரன் ரீ-ரிலீஸ்:

சின்ன வயதிலேயே ராவுத்தர் வாபாவை பப்பா என்று தான் அழைப்பேன். வாபா தான் பப்பாவாக மாறிவிட்டது. இப்போது இந்த படம் கேப்டன் உடைய 100-வது படம். ஆனால், அவருடைய மறைவுக்கு பிறகு இதை முதல் படமாக நாம் கொண்டாட வேண்டும். அவர் நடித்த 156 படங்களுமே இன்றைய தலைமுறையினருக்கு ரிலீஸ் ஆகும். திரைப்படம் தொடர்பாக படிக்கும் மாணவர்களுக்கும் இத்திரைப்படம்
கேஸ் ஸ்டடி போல இருக்கும்.

https://www.youtube.com/watch?app=desktop&v=3FyZQvG3sPw

விழாவில் விஜய பிரபாகரன்:

தன்னுடைய ஒவ்வொரு படத்திற்குமே எப்படியான கடினங்களை எல்லாம் மேற்கொண்டு ஸ்டண்ட் செய்தார் என்பதெல்லாம் எங்களை அழைத்து சொல்லுவார். இப்படத்திற்காக மற்றவர்கள் எவ்வளவு உழைத்திருக்கிறார்கள் என்பதையும் அப்பா எங்களிடம் சொல்லி இருக்கிறார். இப்படியான படங்களை கொண்டாட வேண்டியது நம்முடைய பொறுப்பு. ரம்யா கிருஷ்ணன் மேம் நடந்து வரும்போது ஆட்டமா தேரோட்டமா பாடல் வருவது இன்றும் நினைவிருக்கிறது. இப்படத்தினுடைய படபிடிப்பு சமீபத்தில் சரத்குமார் சாருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது.

கேப்டன் பற்றி சொன்னது:

அந்த அளவிற்கு அவர் நிறைய சவால்களை சந்தித்திருக்கிறார். அதேபோல மன்சூர் அலிகான் சார் சின்ன வயதில் இருந்தே என்னை தூக்கி வைத்துக்கொண்டு இருந்தார். கேப்டன் இறந்த நேரத்தில் இறுதி சடங்கு வரை மன்சூர் அலிகான் கூடவே இருந்தார். அந்த அளவிற்கு நல்ல உள்ளம் கொண்டவர் மன்சூர் அலிகான் சார். இந்த படம் நடக்கும்போது நான் பிறந்ததாகவும், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் நினைவாக தான் எனக்கு விஜய பிரபாகரன் என்று பெயர் வைத்ததாகவும் அப்பா என்னிடம் சொல்லி இருக்கிறார்.
இந்தப் பெயர் பற்றி உனக்கு இன்றைக்கு தெரியாது. நாளை நான் இல்லை என்றாலும் இந்த பெயர் உன்னை பெயர் சொல்லி உயர்த்தும் என்றெல்லாம் அப்பா சொல்லி இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=muza6Q0RnSY

விமர்சனம் பற்றி சொன்னது:

குடும்ப விழாக்களுக்கு செல்லவில்லை என்றாலும் கட்சி, சினிமா நண்பர்களின் விழாவுக்கு செல்ல வேண்டும் என்று அப்பா செல்பி கொடுத்து தான் வளர்த்திருக்கிறார். அப்பா இல்லை என்றாலும் இந்த குழுவோடு இணைந்து நான் கொண்டாட வேண்டும் என்பதற்காகத்தான் இங்கு வந்திருக்கிறேன். அப்பா இறந்து ஒரு வருடம் ஆனது போதும் இன்னும் நான் அழுது கொண்டிருக்கிறேன் என்பது பலருமே கிண்டல் செய்கிறார்கள். ஆனால், அப்பாவை நினைத்து நான் தினம் தோறும் அழுவேன். அதில் எந்த அசிங்கமும் கோழைத்தனமும் இல்லை. இந்த படம் இப்போது ரிலீஸ் ஆகி 100 நாட்கள் ஓட வேண்டும் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full