கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய படங்களில் பெரும் தோல்வியை தழுவியது. இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து இருந்தார்.

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், த்ரிஷா, மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருந்தனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்படி ஒரு நிலையில் தற்போது விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி நடித்து வருகிறார்.

Advertisement

இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா- விஜய் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்கள். மேலும், இந்த படத்தில் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், இவானா உட்பட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

அதோடு இந்த படத்தில் விஜய் அவர்கள் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.இந்த படம் ஒரு விண்வெளி கதையாக இருக்கும் என்றும், விஜய் விஞ்ஞானியாக இருப்பார் என்றெல்லாம் ரசிகர்கள் விவாதிக்கத் தொடங்கி விட்டார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு படு மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் AI தொழில் நட்பம் மூலாம் விஜயகாந்த்தை கொண்டு வர இருக்கின்றனர்.

Advertisement

இதற்காக கேப்டன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் வெங்கட் பிரபு அனுமதி பெற்று இருக்கிறார். கேப்டன் வரும் காட்சிகளை படத்தின் ரீலுசுக்கு முன்னரே தங்களுக்கு காட்ட வேண்டும் என்று கேப்டன் குடும்பம் நிபந்தனையும் விதித்துள்ளது. நடிகர் விஜய்க்கும் கேப்டனுக்கு ஒரு நெருங்கிய உறவு இருந்தது. ஆரம்பத்தில் விஜயகாந்த் நடித்த பல படங்களை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி தான் இயக்கினார்.

Advertisement

அதன் நன்றிக்கடனாக விஜய் நடிகராக அறிமுகமான போது அவருடன் சேர்ந்து படங்களில் நடித்த கேப்டன். விஜயகாந்த்தின் இறப்பிற்கு கூட நடிகர் விஜய் நேரில் சென்று தனது அஞ்சலியை செலுத்தினார். மேலும், தற்போது அரசியல் கட்சியை துவங்கி இருக்கும் விஜய் GOAT படத்தை தொடர்ந்து அடுத்து வெளியாக இருக்கும் படத்துடன் சினிமாவிற்கு முழுக்கு போட இருக்கிறார். இதனால் GOAT படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement