மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடிய கேப்டன்.! என்ன ஸ்பெஷல் தெரியுமா.! புகைப்பட தொகுப்பு இதோ.!
தே மு தி க தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நல குறைபாட்டால் அவதி பட்டு வருகிறார். இதற்காக தற்போது வெளிநாடு சென்று சிகிச்சை பெற்றுவருகிறார். அவ்வப்போது அவரது புகைப்படங்கள் வெளியாகிகொண்டிருக்கிறது.
அந்த வகையில் சமீபத்தில் விஜயகாந்த தனது மனைவி பிரேமலதாவுடன் கேக் வெட்டி கொண்டாடும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. என்னவென்று பார்த்தால் அவர்களுக்கு ஹாப்பி வெட்டிங் டேவாம்.
விஜயகாந்த மற்றும் பிரேமலதா இருவரும் திருமணம் செய்து கொண்டு 29 வருடங்கள் ஆன நிலையில், இருவரும் தங்களது திருமண நாளை அமெரிக்காவில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
அந்த புகைப்படங்கள் தற்போது இனையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. விஜயகாந்தின் ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும் விஜயகாந்த- பிரேமலதா தம்பதியருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.