கலை நிகழ்ச்சியில் காமெடி செய்து அசத்தி இருக்கும் கேப்டன் மற்றும் வடிவேலு - சண்டைக்கு முன் இருவரும் எப்படி நட்பாக இருந்துள்ளார்கள் பாருங்க

By Siva · 2/9/2022

சண்டைக்கு முன் விஜயகாந்த்- வடிவேலு மேடையில் நகைச்சுவை செய்து அசத்திருந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் வடிவேலு. இவர் சினிமா உலகில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்து வருகிறார். நடிகர் ராஜ்கிரனால் அறிமுகம் செய்யப்பட்டு தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்திலுக்கு பிறகு ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டவர் காமெடி நடிகர் வைகைபுயல் வடிவேலு.

இது பலரும் அறிந்த ஒன்று. பின் வடிவேலு அவர்கள் 23ம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதை தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். பின் இடையில் சில பிரச்சனைகளால் சில ஆண்டு காலமாக இவர் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். அந்த பிரச்சனைகள் எல்லாம் முடிந்து தற்போது வடிவேலு படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் சண்டைக்கு முன் விஜயகாந்த்- வடிவேலு மேடையில் நகைச்சுவை செய்து அசத்திருந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. விஜயகாந்த்- வடிவேலு சண்டை குறித்து பலரும் அறிந்த ஒன்று. வடிவேலுவுக்கு ஒரு மிகப்பெரிய ரோல் கிடைத்தது என்னவோ சின்னக்கௌண்டர் படத்தில் தான். அந்த படம் முழுதும் விஜயகாந்திற்கு குடை பிடித்து வருவார் வடிவேலு. அதன் பின் விஜயகாந்தின் பல படங்களில் நடித்தார் வடிவேலு.

https://twitter.com/SureshRo45/status/1562335808782102528

இவர்களின் காமெடி காம்போ ரசிகர்கள் மத்தியில் அதிகமாக ஈர்த்திருந்தது. ஆனால், வடிவேலு சினிமாவில் இருந்து காணமல் போனதற்கு காரணமும் கேப்டன் தான். சில ஆண்டுகளுக்கு முன் தேர்தல் பிரசாரத்தில் திமுகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்திருந்தார் வடிவேலு. வடிவேலு திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாக நினைத்து விஜயகாந்தை மிகவும் கேவலமாக பேசினார். இப்படி ஒரு நிலையில் தான் வடிவேலுவை விஜயகாந்தின் ஆட்கள் அடித்து இருந்ததாக கூறப்படுகிறது.

தனக்கு பல படங்களில் வாய்ப்பு கொடுத்த விஜயகாந்தையே வடிவேலு இப்படி பேசியது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இப்படி ஒரு சூழ்நிலையில் இவர்கள் இருவரும் சண்டைக்கு முன்பு பயங்கர நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். அந்த வகையில் நட்சத்திர விழா மேடையில் இருவரும் இணைந்து தவசி பட நகைச்சுவையை நடித்து அசத்தியிருக்கிறார்கள். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மூலம் வைரல் ஆகி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full