உலகம் முழுவதும் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இதனால் உலகம் முழுவதும் உள்ள அரசாங்கம், காவல்துறை, தூய்மை பணியாளர்கள், மருத்துவர்கள் என எல்லோரும் தங்களுடைய உயிரை பணயம் வைத்து போராடி வருகிறார்கள். கொரோனா காரணமாக மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதற்காக வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். ஊரடங்கு உத்தரவால் பொது இடங்கள், கடைகள், தியேட்டர், கோவில்கள், போக்குவரத்து என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17265 ஆகவும், 543 பேர் பலியாகியும் உள்ளார்கள். நாளுக்கு நாள் ஒட்டுமொத்த உலகமும் கொரோவினால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனாவின் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கு உத்தரவை மீண்டும் மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார்.

Advertisement

இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் மருத்துவராக இருந்து வந்த நபர் கடந்த சில தினங்களாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் சிகிச்சை பெற்று வந்த அந்த மருத்துவர் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு சிறுநீரக கோளாறு காரணமாக டயாலிசிஸ் உள்ளிட்ட சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்தன. கொரோனா தாக்கத்தால் உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு நேற்று அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து உயிரிழந்த மருத்துவரின் வீடு அமைந்துள்ள அண்ணா நகர் பகுதியில் உள்ள மயானத்திற்கு மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய கொண்டு வந்தபோது அங்கே இருந்த மக்கள் மருத்துவரின் உடலை தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். உடலை தகனம் செய்ய எதிர்த்து போராட்டத்தில் இறங்கிய மக்கள் கற்களையும் கட்டையும் கொண்டு ஆம்புலன்சை அடித்து நொறுக்கியதோடு ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் மாநகராட்சி ஊழியர்களையும் கடுமையாக தாக்கினர். இதையடுத்து மருத்துவரின் உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Advertisement

மக்களின் நலனுக்காக போராடி வரும் மருத்துவர்களின் உடலை தகனம் செய்யவிடாமல் போராடிய மக்களால் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.இந்த நிலையில் தேமுக தலைவரும் நடிகருமான விஜயகாந்த், கொரோனவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் மாமண்டூரில் உள்ள தனது கல்லுரியான ஆண்டாள் அழகர் கல்லூரியில் அடக்கம் செய்து கொள்ளலாம் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளது பலரின் பாராட்டை பெற்று வருகிறது.

Advertisement
Advertisement