சமீபத்தில் பிரதமர் மோடி குறித்து இசைஞானி இளையராஜா பேசியிருக்கும் கருத்து சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியிருக்கும் கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்திய சினிமா உலகில் இசையில் ஜாம்பவானாக திகழ்பவர் இளையராஜா. இவருடைய இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை என்று சொல்லலாம். ஏன்னா, அந்த அளவிற்கு தன்னுடைய இசையால் கட்டிபோட்டவர். மேலும், இவர் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். இதுவரை இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்துள்ளார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இவர் இசையமைப்பாளர், பாடகர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், இவர் பாடல் வரிகளை எழுதுபவர் என்று பலருக்கும் தெரியாத ஒன்று. மேலும், இவர் தமிழக பாடல்களுக்கு இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமை பெற்றவர்.

Advertisement

இளையராஜாவின் சாதனைகள்:

இதனால் இவருக்கு இந்திய அரசின் படத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷண் விருது 2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் இளையராஜாவுக்கு இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது 2018 ஆம் ஆண்டு இந்திய அரசால் வழங்கப்பட்டது. சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை இவர் பெற்றுள்ளார். மேலும், இவர் சில வருடங்களாகவே இசைக்கச்சேரிகள் நடத்துவதில் அதிக ஆக்டிவாக இருக்கிறார். சமீபத்தில் கூட இவர் சென்னையில் இசை கச்சேரி நடத்தி இருந்தார்.

புத்தக விழாவில் இளையராஜா:

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இசைஞானி இளையராஜா அவர்கள் புத்தக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருந்தார். அப்போது மோடியும், அம்பேத்கரும் என்ற புத்தகம் வெளியாகி இருந்தது. இந்த புத்தகத்திற்கு முன்னுரையை இளையராஜா எழுதி இருந்தார். மேலும், இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இளையராஜா கூறியிருப்பது, பிரதமர் மோடியின் தலைமையிலான அரசின் கீழ் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேறிக் கொண்டு இருப்பதாக இருக்கிறது. சமூகநீதி விஷயத்திலும் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

Advertisement

பிரதமர் மோடி குறித்து இளையராஜா கூறியது:

குறிப்பாக முத்தலாக் உள்ளிட்ட சட்டத்தின் மூலம் பெண்கள் வாழ்வில் மாற்றத்தை பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார். தற்போது இதனை அம்பேத்கார் கண்டால் பெருமைப்படுவார். அம்பேத்கர் மற்றும் மோடி ஆகிய இருவருமே ஏழ்மையின் ஒடுக்குமுறையை அனுபவித்தவர்கள் என்பதால் அந்த ஏழ்மையை ஒழிக்க பாடுபட்டவர்கள். இந்தியாவின் மீது மிகப்பெரிய கனவு கண்டு அதன் செயல்பாடுகளை செய்து வருபவர் மோடி என்று இளையராஜா மோடி குறித்து புகழ்ந்து பேசி இருந்தார். இளையராஜாவின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இளையராஜா கருத்து குறித்து விஜயகாந்த் கூறியிருப்பது,

Advertisement

இளையராஜா கருத்து குறித்து விஜயகாந்த் கூறியது:

இளையராஜா அவர்கள் பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு புத்தகம் ஒன்றில் தன்னுடைய கருத்தை தெரிவித்திருந்தார். இளையராஜாவின் கருத்து தனிப்பட்ட கருத்து மற்றும் கருத்து சுதந்திரம் என்ற நோக்கத்தோடு ஏற்றுக்கொண்டு அவரை விமர்சனம் செய்து காயப்படுத்தாமல் இருப்பது பெருந்தன்மையானது. மேலும், அண்ணல் அம்பேத்கர், பிரதமர் மோடி, இசைஞானி இளையராஜா ஆகியோர் சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்றைக்கும் அவர்கள் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக உள்ளனர். ஒரு சூரியன், ஒரு சந்திரன் அதேபோல் தான் இங்கு யாரையும் யாரோடும் ஒப்பிட முடியாது. அவர்களுக்கு நிகர் அவர்கள் தான் என்று கேப்டன் விஜயகாந்த் கூறி இருக்கிறார்.

Advertisement