பிளாக் அண்ட் வைட்டில் விஜயகாந்தாகவே மாறியுள்ள கேப்டனின் மகன். குவியும் லைக்ஸ்.

By Rajkumar · 20/11/2020

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் 'புரட்சி கலைஞர்' விஜயகாந்த். இவரது மகன் சண்முக பாண்டியனும் தமிழில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். 2015-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் 'சகாப்தம்'. இந்த படத்தினை இயக்குநர் சுரேந்திரன் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக சண்முக பாண்டியன் நடித்திருந்தார். இது தான் சண்முக பாண்டியான் ஹீரோவாக அறிமுகமான முதல் தமிழ் திரைப்படமாம்.

இதில் சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக நேஹா ஹிங்கே என்பவர் டூயட் பாடி ஆடியிருந்தார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சுப்ரா ஐயப்பா, ரஞ்சித், தேவயாணி, ஜெகன், பவர் ஸ்டார் சீனிவாசன், சண்முகராஜன், தலைவாசல் விஜய், போஸ் வெங்கட் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் சண்முக பாண்டியனின் அப்பா விஜயகாந்தும் கெஸ்ட் ரோலில் வலம் வந்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து 'மதுர வீரன்' என்ற தமிழ் படத்தில் நடித்தார் நடிகர் சண்முக பாண்டியன். இந்த படத்தினை பிரபல ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கியிருந்தார். இதில் சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக மீனாக்ஷி என்பவர் நடித்திருந்தார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சமுத்திரக்கனி, வேல ராமமூர்த்தி, மைம் கோபி, பால சரவணன் ஆகியோர் நடித்திருந்தனர்.

விஜயகாந்தின் மற்றொரு மகனான விஜய பிரபாகரன் தற்போது தந்தை வழியில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். விஜயகாந்தின் இரண்டு மகன்களான ஷண்முக பாண்டியன் மற்றும் விஜய பிரபாகரன் இருவருமே கொஞ்சம் பப்லியான தோற்றத்தில் தான் இருந்து வந்தார்கள். ஆனால், சமீபத்தில் இவர்கள் இருவரும் போட்டி போட்டுகொண்டு படு ஸ்லிம் தோற்றத்தில் மாறியுள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் முதல் மகனான விஜய பிரபாகரன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படம் அனைவரையும் ஆச்சர்யத்தில் உறைய வைத்துள்ளது. பிளாக் அண்ட் வைட்-ல் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம், 80 களில் அப்பாவை பார்ப்பது போல் உள்ளது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full