நடிகர் மாதவனின் மகன் சர்வதேச நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற நிலையில் தற்போது அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. நடிகர் மாதவன், சரிதாவை 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளார்.தற்போது இவருக்கு 16 வயது ஆகிறது. வேதாந்த் மாதவன் விளையாட்டு துறையில் அதிக ஆர்வம் உள்ளவர். இதனால் இவர் நீச்சல் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். மேலும், இவர் பல நீச்சல் போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு பதக்கங்களையும் வென்றுள்ளார்.

அந்தவகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் வேதாந்த் பங்குபெற்று இருந்தார். இதில் இவர் 7 பதக்கங்களை வென்று அசத்தி இருக்கிறார்.இதற்கு பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற்ற 800 மீட்டர் பிரிவில் தங்க பதக்கம் வென்று இருக்கிறார் வேதாந்த். அதிலும் வெறும் 10 மில்லி நொடிகள் வித்யசத்தில் தங்கத்தை தட்டி சென்றார் வேதாந்த்.

இந்த வெற்றி குறித்து பேசிய அவர் ‘”நான் என் அப்பாவின் நிழலில் வாழ விரும்பவில்லை. நான் அவரது மகனாக மட்டுமே இருக்க விரும்பவில்லை. எனக்கென ஒரு பெயர் வாங்க விரும்புகிறேன். எனது குடும்பம் எனக்கு தொடர்ச்சியான ஆதரவு வழங்கி வருகிறது. எனக்காக எனது பெற்றோர்கள் துபாய்க்கு குடிபெயர்ந்து வந்துள்ளனர்” என பதிவு செய்தார். இந்த நிலையில் மலேசியாவில் நடைபெற்ற மலேசியன் இன்விடேஷனல் ஏஜ் குரூப் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு வேதாந்த் 5 தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.

Advertisement

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மாதவன் ‘மலேசியா நாட்டின் கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசியன் இன்விடேஷனல் ஏஜ் குரூப் சாம்பியன்ஷிப் போட்டியில் கடவுளின் ஆசிர்வாதத்தாலும் உங்கள் வாழ்த்துக்களினாலும் வேதாந்த் இந்தியாவுக்காக 50மீ, 100மீ, 200மீ,400 மீ மற்றும் 1500 மீ ஆகிய பிரிவுகளில் 5 தங்க பதக்கங்களை வென்றிருக்கிறார். பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

Advertisement

இதனை தொடர்ந்து மாதவன் மகனுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில் நடிகர் விஜயகாந்த்தும் மாதவன் மகனை பாராட்டி பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘மலேசியாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் பங்கேற்ற நடிகர் மாதவனின் , 17 வயது மகன் வேதாந்த் 50, 100, 200, 400 & 1500 மீட்டர் ஆகிய பிரிவுகளில் பங்கேற்று வெற்றி பெற்று, 5 தங்கங்களை வென்றுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

மேலும் ஒலிம்பிக் உள்ளிட்ட உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்கள் வென்று தமிழகத்திற்கும் இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் மனப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன்.’ என்று பதிவிட்டு இருந்தார். கேப்டனின் இந்த பதிவை கண்ட மாதவன் ‘மிக்க நன்றி அய்யா’ என்று நெகிழ்ச்சியுடன் பதில் அளித்துள்ளார்.

Advertisement