அண்ணா இங்க பாரு அம்மா போட்டோ, ப்ரீத்தா காண்பித்த விஷயம் அருண் விஜய்யின் Reaction

By Arun · 19/2/2024

கோலாகலமாக தொடங்கி இருக்கும் அனிதா விஜயகுமார் மகளின் திருமணம் குறித்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் விஜயகுமார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். ஆரம்பத்தில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்த விஜயகுமார் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

மேலும், இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.
இதனிடையே விஜயகுமார் கடந்த 1969 ஆம் ஆண்டு முத்துக்கன்னு என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 1976ல் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டார். விஜயகுமார்- முத்துக்கனுக்கு பிறந்தவர்கள் தான் அருண் விஜய், அனிதா , கவிதா. விஜயகுமார்-மஞ்சுளாவிற்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி. ஆனால், அருண் விஜய் அனைவரையும் உடன் பிறந்த சகோதரிகளாக தான் பாவித்து வருகிறார்.

விஜயகுமார் குடும்பம்:

அதேபோல் இவருடைய மகன் அருண்குமார் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் மிரட்டிக் கொண்டு வருகிறார். மேலும், விஜயகுமாரின் மகள்களும் படங்களில் நடித்திருந்தார்கள். தற்போது விஜயகுமார் தன்னுடைய குடும்பத்தையும், கேரியரையும் கவனித்து வருகிறார். மேலும், அருண் விஜய்யின் அக்கா கவிதா அவர்கள் சரத்குமார் நடிப்பில் வெளியான கூலி திரைப்படத்தில் நடித்திருந்தார். கவிதாவின் முதல் பொண்ணு தான் ஹாசினி.

View this post on Instagram

A post shared by I Rajalakshmi (@rajis_mehandi_makeup)

அனிதா விஜயகுமார் குறித்த தகவல்:

இவரின் மற்றொரு சகோதரியான அனிதா குறித்து பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். இவர் கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். தற்போது தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் லண்டனில் வசித்து வருகிறார் அனிதா. இந்த நிலையில் கடந்த ஆண்டு அனிதா விஜயகுமாரின் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது. அதில் விஜயகுமார் உடைய மகன், மகள்கள், பேரன்கள், பேத்திகள் எல்லோரும் கலந்து கொண்டு இருந்தார்கள்.

அனிதா மகளின் திருமணம் :

வனிதா மட்டும் இதில் கலந்து கொள்ளவில்லை. மேலும், அனிதாவின் மகள் தியாவின் திருமணம் இன்று 19ஆம் தேதிநடைபெற்றது . இதனால் திருமண ஏற்பாடுகள் எல்லாம் மும்முறமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் தான் தற்போது வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் விஜயகுமார் குடும்பத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு விசேஷம் என்றாலும் ஒன்று கூடி வருவார்கள்.

View this post on Instagram

A post shared by I Rajalakshmi (@rajis_mehandi_makeup)

ப்ரீத்தா காண்பித்த விஷயம் :

வழக்கம்போல் வனிதா தான் இந்த விசேஷத்தில் கலந்து கொள்ளவில்லை. இப்படி ஒரு நிலையில் விஜயகுமாரின் மகள் ப்ரீத்தா மஞ்சுளாவின் உருவத்தை மருதாணியாக போட்டு அதனை தனது அண்ணன் அருண் விஜய் மற்றும் அப்பா விஜய்குமாருடன் காண்பித்து இருக்கிறார். இதனை கண்ட இருவரும் அந்த மெஹந்தியை பார்த்து ரசித்து ஒரு நொடி உருகி போகி இருக்கின்றன. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full