ஆடு பகை, குட்டி உறவு - தனது பேரனின் முதல் படம், தாத்தா விஜயகுமார் பெருமிதம்
வனிதா மகனுக்காக நடிகர் ரஜினிகாந்த் செய்திருக்கும் செயல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபல நட்சத்திர தம்பதிகளாக இருந்த விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் தான் வனிதா. இவர் ஆரம்பத்தில் சில படங்களில் நடித்து சில காலம் விலகி இருந்தார். பின் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது சீரியல், படங்கள், பிசினஸ் என கலக்கி கொண்டு வருகிறார்.
இதனிடையே வனிதா அவர்கள் கடந்த 2000ம் ஆண்டு நடிகர் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ரீஹரி, ஜோவிகா என்று இரண்டு பிள்ளைகள பிறந்தார்கள். நன்றாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கை கடந்த 2005ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. அதன் பின்னர் தனது மகனை தன்னுடன் அனுப்பி விட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஆகாஷ். ஆனால், வனிதா சண்டை போட்டார். கடைசியில் இவர்களின் குடும்ப விவகாரம் அனைவரும் அறிந்ததே.
வனிதா மகன் குறித்த தகவல்:
பின் வனிதா மகன் ஸ்ரீஹரி அவரின் தந்தை ஆகாசுடன் தான் வளர வேண்டும் என்று நீதி மன்றம் தீர்ப்பளித்தது. அதற்கு பின் தனது அப்பாவின் வளர்ப்பில் வரும் ஸ்ரீ ஹரி, தனது தாத்தா விஜயகுமார் குடும்பத்துடன் நல்ல தொடர்பில் இருந்து வருகிறார். இவர் வெளிநாட்டில் சினிமா சம்மந்தப்பட்ட படிப்பை முடித்து இருக்கிறார். தற்போது ஸ்ரீஹரி தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கி இருக்கிறார். ஸ்ரீஹரி ஹீரோவாக நடிக்கும் முதல் படத்தை இயக்குனர் பிரபு சாலமன் தான் இயக்குகிறார்.
ஸ்ரீஹரி நடிக்கும் படம்:
இந்தப்படத்தில் இயக்குனர் பிரபு சாலமன் மகள் ஹஷேல் ஷைனி கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சிங்கத்தை மையமாக வைத்து வந்த படத்தை எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்கு மாம்பூ(mambo) என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விழா நடைபெற்று இருக்கிறது. இந்த விழாவில் நடிகரும், ஸ்ரீஹரியின் தாத்தாவான விஜயகுமார் கலந்துகொண்டு கொண்டிருந்தார். பின் அவர் விழாவில், சின்ன வயதிலேயே ஸ்ரீஹரி எப்படி வாழனும்? எப்படி எல்லாம் நடந்து கொள்ளணும் என்று கற்றுக்கொண்டு பக்குவம் உடன் இருக்கிறான்.
https://youtu.be/EBCIKaM0s4Y?si=MeoRn5Jp1WVsBijp
விழாவில் விஜயகுமார் சொன்னது:
அவன் 12-ம் வகுப்பு படித்து முடித்து சினிமாத் துறை சம்பந்தப்பட்ட படிப்பு படிக்கிறேன் என்றார். பின் அவர் லண்டனில் மூன்று வருடம் இயக்கம், நடிப்பு, தயாரிப்பு ஆகியவற்றை சிறப்பாக படித்து முடித்து வந்தார். வந்தவுடன் என்ன செய்யப்போற என்று கேட்டதற்கு நான் இயக்குகிறேன் என்றார். உதவி வேண்டுமா என்று கேட்டதற்கு வேண்டாம், நானே பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி பல இயக்குனர்களிடம் ஏறி இறங்கினார். ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நான், ஒரு நாள் ரஜினியை சந்திக்க ஸ்ரீஹரியை அழைத்துக்கொண்டு போனேன்.
https://youtu.be/OZ9FsHOpUV4?si=b9jRqQuluKcSrPZt
ரஜினி குறித்து சொன்னது:
ரஜினியிடம் எல்லாவற்றையும் சொல்னேன். அவரும் ஹரியுடன் பேசி, அவனுக்கு நடிக்க விருப்பம் இருக்கிறது. நல்ல இயக்குனர், நல்ல தயாரிப்பு நிறுவனத்தை பார்த்து பண்ணுங்கள் என்று சொன்னார். பின் நான் பிரபு சாலமன் பற்றி சொன்னவுடன் சூப்பர் அவர் நல்ல இயக்குனர். அவருடைய படம் நன்றாக இருக்கும், முயற்சி பண்ணுங்கள் என்றார். அதற்கு நான், சிங்கம்- ஹீரோ என்றவுடன் ரஜினி புகழ்ந்து பேசி இருந்தார். பின் இயக்குனர் வைத்து கதை சொன்னவுடன் ரஜினி, பிரமாதமாக இருக்கிறது கதை. நன்றாக படம் வரும் தயவுசெய்து நல்ல தயாரிப்பாளரை வைத்து படத்தை எடுங்கள். ஸ்ரீ ஹரின் முயற்சிக்கு நீங்கள் தான் சப்போர்ட் செய்ய வேண்டும் என்று பேசி இருக்கிறார்.