காசுக்காக பண்றேன்னு சொல்லாதீங்க, சீமானால அவமானப்பட்டு வந்து நிக்கிறேன் - கண்ணீர் விட்ட விஜயலக்ஷ்மி.

By Rajkumar · 28/8/2023

கடந்த சில வருடங்களாக சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து வரும் விஜயலக்ஷ்மி தற்போது சீமானால் அனைத்தையும் இழந்து நிற்பதாக கண்ணீர் மல்க பேசி இருக்கிறார். தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் விஜயலட்சுமி. இவர் 1997 ஆம் ஆண்டு நாகமண்டலம் என்ற கன்னடப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். பின் இவர் தமிழில் பிரண்ட்ஸ் படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் கதாநாயகியாக நடித்தார். பின் சினிமா வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதோடு இவர் சீமான் இயக்கிய வாழ்த்துக்கள் படத்திலும் நடித்திருந்தார். மேலும், இவர் தமிழில் கடைசியாக ஆர்யா நடிப்பில் வெளிவந்த பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற படத்தில் தான் நடித்திருந்தார்.

விஜயலக்ஷ்மி திரைப்பயணம்:

பின் கன்னட மொழிகளில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது அங்கேயும் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தமிழ்நாட்டுக்கும்-பெங்களூருக்கும் விஜயலட்சுமி அலைந்து கொண்டு இருக்கிறார். மேலும், சில ஆண்டுகளாகவே சோசியல் மீடியாவில் இவரைப் பற்றி பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் தான் உள்ளன. அதுமட்டுமில்லாமல் தனக்கு பிரச்சனை இருப்பதால் இணையத்தில் தனக்கு உதவி செய்யுங்கள் என்றும் இவர் வீடியோ போட்டிருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

https://www.youtube.com/watch?v=6456eXidwn4

சீமான்-விஜயலக்ஷ்மி பிரச்சனை:

இதனிடையே நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தன்னை மூன்று வருடமாக காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்ளவதாக சொல்லி தற்போது மறுக்கிறார் என்று விஜயலக்ஷ்மி புகார் செய்திருந்தார். இது தொடர்பாக விஜயலக்ஷ்மி வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. ஒரு கட்டத்தில் விஜயலக்ஷ்மி தற்கொலைக்கு கூட முயன்று இருந்தார்.

மீண்டும் சீமான் மீது புகார் :

ஆனால், சமீப காலமாக சீமானை பற்றி எந்த விஷயத்தையும் பேசாமல் இருந்து வந்த விஜயலக்ஷ்மி சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் சீமான் மீது மீண்டும் குற்றச்சாட்டை கூறி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் '2011ல் கொடுத்த வழக்கை மீண்டும் துவங்க சொல்லி இருக்கிறோம். ஹரி நாடார் கைதாகி இருக்கிறார். சீமான் இன்னும் கைதாகவில்லை. நான் என்னவோ காசுக்காக பண்றன்னுனாலாம் எழுதாதீங்க.

கண்ணீர் விட்ட விஜயலக்ஷ்மி :

நான் காசுக்காக இப்படி எல்லாம் செய்கிறேன் என்று எழுதி என்னை கேவலப்படுத்தி விடாதீர்கள் நான் சீமானை நம்பி அவமானப்பட்டு வந்து நிற்கிறேன். எனக்கு இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை. நான் அவரின் மனைவி என்னையே இப்படி அவர் கேவலாக பேசுறார். என்னால் முடிந்தவரை நான் போராடிக் கொண்டே இருக்கிறேன். கண்டிப்பாக சீமானை கைது செய்ய வைப்பேன்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full