டைமண்ட் வாட்ச், தங்க நகைகள்,வெளிநாட்டில் இருந்து வரும் பணம் - சீமான் குறித்து அடுத்த வீடியோவை வெளியிட்ட விஜயலக்ஷ்மி

By Dhilip Kumar · 31/8/2023

சில வருடங்களாக சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து வரும் விஜயலக்ஷ்மி தற்போது சீமானால் அனைத்தையும் இழந்து நிற்பதாக கண்ணீர் மல்க பேசிஇருக்கும் விஜயலக்ஷ்மி சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதோடு தன்னை கருக்கலைப்பு செய்ய வைத்ததாக புகார் அளித்து இருக்கிறார். தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் விஜயலட்சுமி. இவர் 1997 ஆம் ஆண்டு நாகமண்டலம் என்ற கன்னடப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். பின் இவர் தமிழில் பிரண்ட்ஸ் படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் கதாநாயகியாக நடித்தார். பின் சினிமா வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதோடு இவர் சீமான் இயக்கிய வாழ்த்துக்கள் படத்திலும் நடித்திருந்தார். மேலும், இவர் தமிழில் கடைசியாக ஆர்யா நடிப்பில் வெளிவந்த பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற படத்தில் தான் நடித்திருந்தார்.

விஜயலக்ஷ்மி திரைப்பயணம்:

பின் கன்னட மொழிகளில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது அங்கேயும் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தமிழ்நாட்டுக்கும்-பெங்களூருக்கும் விஜயலட்சுமி அலைந்து கொண்டு இருக்கிறார்.

View this post on Instagram

A post shared by Sun News Tamil (@sunnews)

மேலும், சில ஆண்டுகளாகவே சோசியல் மீடியாவில் இவரைப் பற்றி பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் தான் உள்ளன. அதுமட்டுமில்லாமல் தனக்கு பிரச்சனை இருப்பதால் இணையத்தில் தனக்கு உதவி செய்யுங்கள் என்றும் இவர் வீடியோ போட்டிருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

மேலும் ஒரு புகார்:

சீமான் அவர்களுக்கு ஜெனிவாவில் இருந்து மதுரை கார்த்திக் மற்றும் சில நபர்கள்  மூலமாகவும் இவருக்கு டைமண்ட் வாட்ச் தங்க ஆபரணங்கள்  வைரக்கல் பதிக்கப்பட்ட தங்க ஆபரணங்கள் எல்லாமே சுவிட்சர்லாந்து மற்றும் ஜெனிவாவில் இருந்து சீமான் அவர்களுக்கு வருகிறது என்று கூறினார். அந்த நகைகளை எல்லாம் போட்டு பார்த்து அழகு பார்த்துவிட்டு மறுநாள் அவர்களின் தாயார் ஒரு அதனை இளையாங்குடிக்கு எடுத்துக்கொண்டு போய் கொடுத்து  விடுவார்.

அவர்களின் தாயார் அதனை பூமியில் அடியில் பதித்து வைத்துப்பார். அந்த நேரங்களிலே அந்த ஆபரணங்களின் விலை இலட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் இருந்து வந்தது. 15 வருடங்களுக்கு முன்பே இந்த நகைகளின் விலை 15 முதல் 20 லட்சம் ரூபாய் இருந்தது. ஆனால் தற்பொழுது அவர் எனக்கு வீட்டு வாடகை கட்டவே முடியாது என்று கூறி வருகிறார். முதலமைச்சர் ஐயா இவர் மீது வருமானவரித்துறையை சோதனை செய்ய வேண்டும். என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full