தனலட்சுமியை மீண்டும் கொண்டு வாங்க கமல் சார் - விஜயசாரதி வைத்த வேண்டுகோள். அசீம் குறித்து சொன்ன விஷயம்.

By Siva · 26/12/2022

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று தனலட்சுமி வெளியேற்றப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது அவருக்கு ஆதரவாக விஜயசாரதி பதிவிட்டு இருக்கும் பதிவு வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது முதலே 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளராக வெளியேறி வருகின்றனர்.கடந்த வாரம் வரை மொத்தம் 9 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த நிலையில் நிலையில் வெளியேறப்போகும் அந்த போட்டியாளர் யார் என்பதை அறிய ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருந்தது.

கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனின் அமுதவாணன் மற்றும் Adkவை தவிர அசீம், விக்ரமன், ஷிவின், மைனா நந்தினி, தனலட்சுமி, ரச்சித்தா, கதிரவன் ஆகிய 7 பேர் நாமிநெட் ஆகி இருந்தனர். இதில் கதிர், ரச்சிதா அல்லது மைனா நந்தினி தான் வெளியேறுவார்கள் என்று பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்யும் வகையில் தனலட்சுமி வெளியேறி இருந்தார்.

இந்த சீசனில் ஒரு சாதாரண பெண்ணாக அறிமுகமான தனலட்சுமி டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தனலட்சுமி. சிறுவயதிலேயே நடிப்பதில் ஆர்வம் கொண்ட இவர் சில படங்களிலும், பறை இசை ஆல்பத்திலும் நடித்து இருக்கிறார். இவர் பிக் பாஸில் கலந்துகொண்ட முதல் நாளில் இருந்தே பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பையும் சம்பாதித்தார்.

தனலட்சுமி என்னதான் வெறுப்பை சம்பதித்தாலும் அவர் இந்த வாரம் எலிமினேட் ஆகி இருப்பதை பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் பிக் பாஸ் வீட்டில் ஒன்றுமே செய்யாமல் இருக்கும் கதிர், ரச்சிதா, எப்போதும் புறம் பேசிக்கொண்டு இருக்கும் Adk, காமெடி என்ற பெயரில் ரசிகர்கள் மத்தியில் Cringe பெயரை எடுத்த மைனா போன்றவர்கள் எல்லாம் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது தனலட்சுமி வெளியேறியது தான் ஆச்சரியமே.

தனலட்சுமி வெளியேற்றத்தை தொடர்ந்து பலரும் அவருக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நீங்கள் கேட்ட பாடல் விஜயசாரதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் 'தனலட்சுமி, அசீம் மற்றும் அமுதவாணனை விட சிறந்த போட்டியாளர். கமல் சார் நீங்கள் எப்போதும் சொல்வது போல பார்வையாளர்களாகிய எங்களுக்கு தனா நிகழ்ச்சியில் தொடர வேண்டும். இதை கொஞ்சம் பரிசீலனை செய்யுங்கள்' என்று பதிவிட்டு இருந்தார்.

இதற்கு ட்விட்டர் வாசி ஒருவர் 'நிகழ்ச்சியை பார்க்காமல் கமல் கிட்ட கேட்டா எப்படி' என்று கூற, அதற்கு பதில் அளித்த விஜயசாரதி 'கமல் சாருக்கு பிக் பாஸ் வீட்டில் என்ன நடக்கிறது என்பது எல்லாம் தெரியும். கடந்த வாரம் கூட அசீமை அடுத்தவர்கள் செய்யும் வேலை குறித்து பேசக் கூடாது என்று எச்சரித்தார். ஆனால், அசீம் அதை மீறிவிட்டார். பிக் பாஸை மதிக்காத ஒரு ஆள் எதற்கு ? இது நிகழ்ச்சியின் மேன்மையா ? அசீம் ஒரு தவறான உதாரணத்தை செட் செய்கிறார்' என்று கூறியுள்ளார். ''

Tamil Behind Talkies AMP · Quick view
View full